பொது செய்தி

தமிழ்நாடு

1,100 அரிய வகை மரக்கன்று

Added : நவ 21, 2020
Share
Advertisement
திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர் - 6' திட்டத்தின், 75வது நிகழ்ச்சியில் நேற்று, பெருமாம்பாளையத்தில் 1,100 மரக்கன்றுகள் நடப்பட்டன.'வனத்துக்குள் திருப்பூர் -6' திட்டத்தின், 75வது நிகழ்ச்சி, மலைக்கோவில் அருகே உள்ள பெருமாம்பாளையம் வடக்கு தோட்டத்தில் நேற்று நடந்தது. உரிமையாளர் ரத்தினசபாபதி, ரேவதி, விஸ்வநாதன், சிவகுரு, ராஜேஷ்குமார், சீனிவாசன், கோகுல் மற்றும்
 1,100 அரிய வகை மரக்கன்று

திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர் - 6' திட்டத்தின், 75வது நிகழ்ச்சியில் நேற்று, பெருமாம்பாளையத்தில் 1,100 மரக்கன்றுகள் நடப்பட்டன.'வனத்துக்குள் திருப்பூர் -6' திட்டத்தின், 75வது நிகழ்ச்சி, மலைக்கோவில் அருகே உள்ள பெருமாம்பாளையம் வடக்கு தோட்டத்தில் நேற்று நடந்தது. உரிமையாளர் ரத்தினசபாபதி, ரேவதி, விஸ்வநாதன், சிவகுரு, ராஜேஷ்குமார், சீனிவாசன், கோகுல் மற்றும் 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினர் மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தனர்.மகாகனி, சந்தனம், ஈட்டி, பலா, வேங்கை, காயா, மலைவேம்பு, கடம்பு, குமிழ், தேக்கு, முள்சீத்தா, நாவல், கறிப்பலா, அத்தி என, 1,100 மரக்கன்றுகள் நேற்று நடப்பட்டன. ஒரே பகுதியில், அரியவகை மரக்கன்றுகளை வளர்ப்பதன் மூலம், பாரம்பரிய மரங்களை அழியாமல் பாதுகாக்க முடியுமென, விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இத்திட்டத்தில், இலவசமாக மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விருப்பமுள்ளவர்கள், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, திட்டக்குழுவினர் அழைப்புவிடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X