பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம் : அரசியல் புகுந்ததால் வந்த வினை!

Updated : நவ 22, 2020 | Added : நவ 21, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :என்.எஸ்.வெங்கடராமன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் சிலர், தங்களின் அரசியல் லாபத்திற்காக, பல்கலை குறித்து அடிப்படை ஏதும் இல்லாமல், அவதுாறு பரப்புவது வேதனை அளிக்கிறது.தமிழக அரசு, அண்ணா பல்கலை துணைவேந்தர் மீதான புகார் குறித்து விசாரிக்க, ஒரு குழுவை அமைத்திருக்கிறது. இதை,

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :

என்.எஸ்.வெங்கடராமன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் சிலர், தங்களின் அரசியல் லாபத்திற்காக, பல்கலை குறித்து அடிப்படை ஏதும் இல்லாமல், அவதுாறு பரப்புவது வேதனை அளிக்கிறது.latest tamil news
தமிழக அரசு, அண்ணா பல்கலை துணைவேந்தர் மீதான புகார் குறித்து விசாரிக்க, ஒரு குழுவை அமைத்திருக்கிறது. இதை, பல்கலையில் பணிபுரியும் பேராசியர்கள் கண்டித்துள்ளனர். துணைவேந்தர் சுரப்பா குறித்து, அவர்களுக்கு நல்லெண்ணமே உள்ளது. சில அரசியல்வாதிகள், அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா குறித்து, அவதுாறு பரப்பி வருகின்றனர். இதற்கு என்ன காரணம்? அரசியல்வாதியின் கைப்பாவையாக, அவர் இயங்காதது தானோ என்ற சந்தேகம், பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

தகுதியின் அடிப்படையில், தேர்வு செய்யும் குழுவின் பரிந்துரையின்படி, அண்ணா பல்கலை துணைவேந்தராக, சுரப்பா நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தகுதியையும், அவர் முன்பு வகித்த பதவிகளையும் நோக்கினால், அரசியல்வாதிகளின் ஆணைப்படி, பல்கலை நிர்வாகத்தை நடத்த
வேண்டிய நிர்பந்தம், அவருக்கு ஏதும் இல்லை என்பது தெளிவாக புரியும். அவர் பதவியேற்ற நாள் முதல், 'அண்ணா பல்கலை துணைவேந்தராக, தமிழர் தான் பதவியேற்க வேண்டும்' என, தமிழினப் போர்வையாளர்கள் கோஷமிடுகின்றனர். இது நியாயமா, ஏற்கக்கூடிய கருத்தா?


latest tamil news
உலகெங்கிலும், பல புகழ்பெற்ற பல்கலைகளில், தமிழர்கள் பலர் பேராசிரியராக பணிபுரிந்து வருகின்றனர். பல்கலை மட்டுமல்ல அனைத்து துறைகளிலும், தமிழர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழர் பணியாற்றக் கூடாது என, எங்கும், யாரும் கூறவில்லை. தமிழகத்தில் மட்டுமே, இந்த அவல நிலை உள்ளது. கல்வித் துறையில் துணைவேந்தர் மற்றும் பேராசிரியரை நியமிக்கும் போது, அவரின் நிறம், ஜாதி, சொந்த நாடு என்ற அடிப்படையில் செயல்படுவது, அநாகரிகம்; முட்டாள்தனம். கல்வித் துறையில், அரசியல் புகுந்ததால் வந்த வினை, இது. தமிழகத்தில், கல்வி நிர்வாகத்திற்கும், அரசியலுக்கும் வேறுபாடு இல்லாமல் காணப்படுகிறது. இதற்கு முன், தமிழக அரசு, அண்ணா பல்கலையை இரண்டாக பிரிப்பது என, முடிவு செய்தது. இதற்கு மாணவர்களும், பேராசியர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அண்ணா பல்கலையை இரண்டாகப் பிரித்தால், ஒரு பிரிவை, சிறந்த ஆராய்ச்சி பல்கலையாக மாற்றி, மத்திய அரசிடமிருந்து கணிசமான தொகையை பெற முடியும் என்பதே, தமிழக அரசின் வாதம் ஆகும். இந்த முடிவை, துணைவேந்தர் விமர்சித்துள்ளார். ஆனால், அரசின் முடிவை விமர்சிக்க, துணைவேந்தருக்கு உரிமை இல்லை என, தமிழக அரசு வாதாடுகிறது. அண்ணா பல்கலை நலன் குறித்து, துணைவேந்தர் கருத்து தெரிவிக்கக் கூடாது என்பது, எந்த வகையில் நியாயம்? நிதி திரட்டுவதற்கு, வேறு மேலான வழிகள் உள்ளன எனக் கூறுகிறார், மூத்த பேராசிரியரான, அண்ணா பல்கலை துணைவேந்தர், சுரப்பா.அண்ணா பல்கலையில் பயின்ற பலர், உலகெங்கிலும் பல்வேறு உயர் பதவியில் இருக்கின்றனர். அரசியல்வாதிகளின் குறுக்கீடு இல்லாமல் இயங்கும் பல்கலையாக மாறினால், தேவைக்கு அதிகமாகவே, உலகெங்கிலும் இருந்து நிதி கிடைக்கும் என்பதில், எந்தவித சந்தேகமும் இல்லை.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
21-நவ-202020:22:24 IST Report Abuse
S. Narayanan திராவிட கட்சிகளில் அதிகம் பேர் படித்தவர்கள் கிடையாது. அதனால் அவர்களுக்கு பல்கலை பற்றி என்ன தெரியும்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
21-நவ-202019:36:12 IST Report Abuse
sankaseshan Sir.CV .RAMAN WHO BELONG TO TN MIGRATED TO BANGALORE WHERE HE WAS WELCOMED , ESTABLISHED INDIAN INSTITUTE OF SCIENCE BY INVESTING NOBLE PRIZE MONEY .THE LOSS IS FOR TN ,GAIN FOR KARNATAKA .
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
21-நவ-202017:55:52 IST Report Abuse
Endrum Indian திருடர்கள் மு....ள்கள் கயவர்கள் அதனுடன் அசிங்கமான கூட சேர்த்துக்கொள்ளலாம் இந்த இரண்டு திராவிஷங்களும் அவர் சேர்ந்த அன்றிலிருந்து அவரை எப்படியாவது நீக்க முயற்சி செய்கின்றனர். கடிதம் போலி அதன் மீது நடவடிக்கை எடுக்கின்றார்களாம்??? இவ்வளவு கேவலமாக ஒரு அரசும் அதன் எதிர்க்கட்சியும் இப்படி செய்லபட்டால் அந்த மாநிலம் உருப்படவே உருப்படாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X