பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்: குடியிருப்பு அருகே குப்பை மலை

Added : நவ 21, 2020
Share
Advertisement
ஆனைமலை:ஆனைமலை பேரூராட்சி நிர்வாகம், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்தாமல் உள்ளதால், குடியிருப்புகள் அருகே குப்பை மலைபோல் குவிந்துள்ளதால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.ஆனைமலை பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், குடியிருப்புகளில் குப்பை சேகரிக்க, 30 துாய்மை பணியாளர்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த, இரண்டு மாதங்களாக பணியாளர்கள், குப்பை
 பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்: குடியிருப்பு அருகே குப்பை மலை

ஆனைமலை:ஆனைமலை பேரூராட்சி நிர்வாகம், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்தாமல் உள்ளதால், குடியிருப்புகள் அருகே குப்பை மலைபோல் குவிந்துள்ளதால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.ஆனைமலை பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், குடியிருப்புகளில் குப்பை சேகரிக்க, 30 துாய்மை பணியாளர்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த, இரண்டு மாதங்களாக பணியாளர்கள், குப்பை சேகரிக்காமல் அலட்சியமாக உள்ளனர்.இதனால், மக்கள் வேறு வழியின்றி ரோட்டோரம் குப்பை கொட்டுகின்றனர். இதனால், இந்திரா நகர், மாசாணியம்மன் கோவில், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அருகிலும், முக்கோணம் உள்பட, பேரூராட்சி முழுவதிலும் குப்பை மலைபோல் குவிந்துள்ளது.குப்பையை அகற்றாமலும், சேகரித்த குப்பையில் உரம் தயாரிக்காமலும் உள்ளனர். மேலும், சுகாதார பணியாளர்கள் குப்பைக்கு தீ வைப்பதால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.தற்போது, மழை பெய்து வருவதால், குப்பையில் மழைநீர் தேங்கி டெங்கு கொசு உற்பத்தியாகி, காய்ச்சல் பரவும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், கடும் துர்நாற்றம் நிலவி தொற்று நோய் பரவுகிறது.குப்பை அகற்ற வலியுறுத்தி, கடந்த வாரம் பேரூராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டு, அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனாலும், குப்பை அகற்றப்படாமல் உள்ளது. இனியாவது திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்தி, சுகாதாரமான சூழலை, அதிகாரிகள் உருவாக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X