பொது செய்தி

தமிழ்நாடு

மழை துவங்கியுள்ள நிலையில் வடிகால் துார்வாரும் பணி

Added : நவ 21, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், பொள்ளாச்சி நகராட்சி பகுதியில், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதில் ஒரு கட்டமாக, மழைநீர் வடிகாலை ஆய்வு செய்து, மழைநீர் தடையின்றி செல்ல தேவையான இடங்களில் வாய்ப்பகுதியை அகலப்படுத்த வேண்டும்.மழைநீர் வடிகால்களில் உள்ள கட்டட துகள்கள் அப்புறப்படுத்த நகராட்சி கமிஷனர் காந்திராஜ் உத்தரவிட்டுள்ளார்.அதன்
 மழை துவங்கியுள்ள நிலையில் வடிகால் துார்வாரும் பணி

பொள்ளாச்சி:வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், பொள்ளாச்சி நகராட்சி பகுதியில், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதில் ஒரு கட்டமாக, மழைநீர் வடிகாலை ஆய்வு செய்து, மழைநீர் தடையின்றி செல்ல தேவையான இடங்களில் வாய்ப்பகுதியை அகலப்படுத்த வேண்டும்.மழைநீர் வடிகால்களில் உள்ள கட்டட துகள்கள் அப்புறப்படுத்த நகராட்சி கமிஷனர் காந்திராஜ் உத்தரவிட்டுள்ளார்.அதன் அடிப்படையில், குடியிருப்பு பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால் துார்வாரும் பணிகளில் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதில், பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி - பணிக்கம்பட்டி ரோடு, பாலாஜி நகரில் மண்ணால் மூடப்பட்ட வடிகாலை, 'பொக்லைன்' இயந்திரம் பயன்படுத்தி துார்வாரும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.அதிகாரிகள் கூறுகையில், 'மழைநீர் வடிகால் துார்வாரும் பணியுடன், மழைக்காலத்தில் நோய் பரவலை கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டியவை குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தேவையில்லாத பொருட்களை அப்புறப்படுத்தவும்; தண்ணீர் தேங்காமல் வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X