பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு முகாம்   நடந்த ஆட்டோ சங்கம் மனு

Added : நவ 21, 2020
Share
Advertisement
வால்பாறை:வால்பாறையில், அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கான நலவாரிய சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று, ஆட்டோ தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.,) பொதுசெயலாளர் பரமசிவம், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:வால்பாறை மலைப்பகுதியில், அரசு அறிவித்துள்ள நலவாரிய உதவித்தொகை பெறுவதற்கும், உறுப்பினர்

வால்பாறை:வால்பாறையில், அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கான நலவாரிய சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று, ஆட்டோ தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.,) பொதுசெயலாளர் பரமசிவம், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:வால்பாறை மலைப்பகுதியில், அரசு அறிவித்துள்ள நலவாரிய உதவித்தொகை பெறுவதற்கும், உறுப்பினர் ஆவதற்கும், சலுகைகள் பெறுவதற்கும் போதிய விழிப்புணர்வு இல்லாததால், நலவாரியத்தில் உறுப்பினராக சேர முடியாமல் தவிக்கின்றனர்.ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நலவாரியத்தில் உறுப்பினராக சேர தயாராக உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, நலவாரியம் சார்பில் வால்பாறை நகரில் சிறப்பு முகாம் நடத்த வேண்டும். இதனால், அமைப்புச்சாரா தொழிலாளர்கள் அதிக அளவில் பயன்பெறுவார்கள்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X