அரசாணிக்காய் விலை வீழ்ச்சி: காய்கறி விவசாயிகள் கவலை

Added : நவ 21, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில், அரசாணிக்காய் பண்ணை கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.பொள்ளாச்சி பகுதியில், தென்னைசாகுபடிக்கு அடுத்தபடியாக, பல்வேறு வகையான காய்கறிகள் அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றன. கொடி வகை காய்களில், அரசாணி ஒவ்வொரு பருவத்திலும் அதிக பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது.கேரள வியாபாரிகள், வாடிக்கையாக
 அரசாணிக்காய் விலை வீழ்ச்சி: காய்கறி விவசாயிகள் கவலை

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில், அரசாணிக்காய் பண்ணை கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.பொள்ளாச்சி பகுதியில், தென்னைசாகுபடிக்கு அடுத்தபடியாக, பல்வேறு வகையான காய்கறிகள் அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றன. கொடி வகை காய்களில், அரசாணி ஒவ்வொரு பருவத்திலும் அதிக பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது.கேரள வியாபாரிகள், வாடிக்கையாக தோட்டங்களுக்கு நேரடியாக வந்து அரசாணிக் காய் கொள்முதல் செய்கின்றனர்.இந்நிலையில், சில நாட்களாக அரசாணிக்காய் பண்ணை கொள்முதல் விலையை கேரள வியாபாரிகள் குறைத்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.கடந்த இரு வாரங்களுக்கு முன் வரை, கிலோ எட்டு ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்ட அரசாணி, தற்போது ஐந்து ரூபாய்க்கு சரிந்துள்ளது.விவசாயிகள் கூறுகையில், 'ஆள் கூலி, பராமரிப்பு செலவுகள், இடுபொருட்கள் விலை, மற்ற விலைவாசி அனைத்தும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கொள்முதல் விலை குறைந்துள்ளது நஷ்டத்தை ஏற்படுத்தும்,' என, கவலை தெரிவித்தனர்.வியாபாரிகள் கூறுகையில், 'கடந்த ஒரு வாரமாக பெய்யும் மழையால், காய்களின் தரம் குறைந்துள்ளது. பொள்ளாச்சி, உடுமலை, பல்லடம், தாராபுரம் பகுதியில் இருந்து, அரசாணி வரத்து அதிகரித்துள்ளது. இதனால், விலை குறைந்துள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X