பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனையில் கட்டுமானப்பணிகள் துவக்கம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், நவீன சலவையகம் அமைக்க கட்டுமானப்பணி துவங்கியுள்ளது.பொள்ளாச்சியில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. தினமும், 2,000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். நோயாளிகள் வசதிக்காக, 350 படுக்கைகள் உள்ளன. உள்நோயாளிகள் பிரிவில் உள்ள படுக்கை, தலையணை உறைகள், அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ள
 மருத்துவமனையில்  கட்டுமானப்பணிகள் துவக்கம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், நவீன சலவையகம் அமைக்க கட்டுமானப்பணி துவங்கியுள்ளது.பொள்ளாச்சியில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. தினமும், 2,000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். நோயாளிகள் வசதிக்காக, 350 படுக்கைகள் உள்ளன. உள்நோயாளிகள் பிரிவில் உள்ள படுக்கை, தலையணை உறைகள், அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ள நோயாளிகளின் துணிகள் துவைக்க சலவையகம் உள்ளது. இங்கு, நான்கு பணியாளர்கள் கைகளால் சலவை செய்து, உலர வைக்கின்றனர்.மழை காலங்களில் துணியை உலர வைக்க இரண்டு நாட்கள் ஆகும். இதற்கு மாற்றாக நவீனமான சலவையகம் அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. தற்போது மருத்துவமனையில் ஐந்து மாடி கட்டடம் உள்ளிட்ட புதிய கட்டடங்கள் கட்டுமானப்பணிகள் நடைபெறுகின்றன. அதனைத்தொடர்ந்து, நவீன சலவையகம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.மருத்துவமனைக்காக ஒதுக்கப்பட்ட, பாலகோபாலபுரம் வீதியிலுள்ள பழைய நகராட்சி நடுநிலைப்பள்ளி இடத்தின் ஒரு பகுதியில் நவீன மயமாக்கப்பட்ட சலவையகம் அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமானப்பணிகள் துவங்கப்பட்டுள்ளன.அதிகாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கட்டுமானப்பணிகளோடு, சலவையகம் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. 60 லட்சம் ரூபாய் செலவில் சலவையகம் அமைக்கப்படுகிறது. நவீன மயமாக்கப்பட்ட சலவையமாக அமைக்கப்படுகிறது. துணிகளை சலவை செய்து, உலர வைக்க இயந்திரங்கள் பயன்படுத்துவதுடன், அங்கேயே சலவை செய்யப்பட உள்ளது.ஒரே இடத்தில் அனைத்து பணிகளும் மேற்கொள்வதுடன் பணிகள் தாமதமின்றி நடைபெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். தற்போது கட்டுமானப்பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X