பொது செய்தி

தமிழ்நாடு

அட்மா திட்டத்தில் கண்டுணர்வு சுற்றுலா

Added : நவ 21, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் நடந்த கண்டுணர்வு சுற்றுலாவில், உடுமலை விவசாயிகள், 50 பேருக்கு, நீரா தொழில்நுட்பம் குறித்து தெரிவிக்கப்பட்டது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய வேளாண் தொழில்நுட்ப மேலாண் முகமை (அட்மா) சார்பில், உள்மாநில அளவிலான கண்டுணர்வு சுற்றுலா நிகழ்வு, தேவம்பாடிவலசு கிராமத்தில் நடந்தது.வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாளர் உமாஷாலினி தலைமை வகித்தார். உதவி

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் நடந்த கண்டுணர்வு சுற்றுலாவில், உடுமலை விவசாயிகள், 50 பேருக்கு, நீரா தொழில்நுட்பம் குறித்து தெரிவிக்கப்பட்டது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய வேளாண் தொழில்நுட்ப மேலாண் முகமை (அட்மா) சார்பில், உள்மாநில அளவிலான கண்டுணர்வு சுற்றுலா நிகழ்வு, தேவம்பாடிவலசு கிராமத்தில் நடந்தது.வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாளர் உமாஷாலினி தலைமை வகித்தார். உதவி தொழில்நுட்ப மேலாளர் கவிமலர் வரவேற்றார். நிகழ்ச்சியில், உடுமலை வட்டாரத்தை சேர்ந்த, 50 முன்னோடி விவசாயிகள் பங்கேற்று, நீரா இறக்குதல், பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், விற்பனை, நீராவில் இருந்து பெறப்படும் நீரா சர்க்கரை, தேன் ஆகியன தயாரிப்பு குறித்து விளக்கமாக கேட்டறிந்தனர். தென்னை மரங்களில் இருந்து நீரா பானம் உற்பத்தி செய்யும் முறை மற்றும் நீரா பருகுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.நிகழ்ச்சியில், விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவன தலைவர் பத்மநாபன் பங்கேற்று, நீரா உற்பத்தி, உப பொருள்களை வியாபாரப்படுத்துதல் குறித்து விளக்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X