பொது செய்தி

தமிழ்நாடு

மழைக்கால முன்னெச்சரிக்கை தீவிரம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
உடுமலை:உடுமலை ஒன்றியத்தில் பருவமழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.உடுமலை சுற்றுப்பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. ஊராட்சிகளில் பருவமழைக்கு முன்பே, காய்ச்சல் பாதிப்புகளுக்கான தடுப்பு நடவடிக்கைகள், வெள்ள அபாய எச்சரிக்கைகள் வழங்கப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.மழை தீவிரமடைந்து

உடுமலை:உடுமலை ஒன்றியத்தில் பருவமழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.உடுமலை சுற்றுப்பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. ஊராட்சிகளில் பருவமழைக்கு முன்பே, காய்ச்சல் பாதிப்புகளுக்கான தடுப்பு நடவடிக்கைகள், வெள்ள அபாய எச்சரிக்கைகள் வழங்கப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.மழை தீவிரமடைந்து வருவதால், கிராமங்களிலும், மழைநீர் தேங்காத வகையிலும் சீரமைப்பு பணிகள் நடக்கிறது. டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் சுழற்சி முறையில் ஊராட்சிகளில் ஆய்வு நடத்தப்பட்டு, கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.கரையோர பகுதிகள் மற்றும் மழைநீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் கிராமங்களில், மணல் மூட்டைகள் தயார்நிலையில் இருக்கவும், பள்ளி மற்றும் சமூக நலக்கூடங்களை அவசர நிலைக்கு தயார்படுத்தி வைத்திருக்கவும், ஊராட்சி நிர்வாகங்களுக்கு அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், ஊராட்சிகளில், சிதிலமடைந்து இடியும் நிலையில் உள்ள கட்டமைப்புகள் குறித்து ஆய்வு நடத்தப்படுவதாக, ஒன்றிய அலுவலர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X