பொது செய்தி

இந்தியா

கொரோனா அல்லாத நோயாளிகளுக்கான சேவைகள் மீண்டும் துவக்கம்

Updated : நவ 21, 2020 | Added : நவ 21, 2020
Share
Advertisement
ஐதராபாத் : தெலுங்கானாவில் கொரோனா அல்லாத நோயாளிகளுக்கான சேவைகள் காந்தி மருத்துவமனையில் மீண்டும் துவங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தெலுங்கானாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் கொரோனா நோய் தொற்றுக்கான சிகிச்சை மட்டுமே

ஐதராபாத் : தெலுங்கானாவில் கொரோனா அல்லாத நோயாளிகளுக்கான சேவைகள் காந்தி மருத்துவமனையில் மீண்டும் துவங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news




தெலுங்கானாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் கொரோனா நோய் தொற்றுக்கான சிகிச்சை மட்டுமே அளிக்கப்படுகிறது. இதனால் கொரோனா அல்லாத மற்ற பிற நோய்களுக்கான சிகிச்சை பெறும் புறநோயாளிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறைந்துள்ளன. செகந்தராபாத்தின் அரசு நடத்தும் காந்தி மருத்துவமனையில் 8 மாத இடைவெளிக்கு பிறகு இன்று முதல் கொரோனா அல்லாத நோயாளிகளுக்கான சேவைகளை மீண்டும் துவங்க திட்டமிட்டுள்ளது.

மார்ச் 2 ஆம் தேதியில் இருந்து தெலுங்கானாவில் முதல் கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியிருந்ததால், அதிகாரிகள் மருத்துவமனையை 'கொரோனா மட்டும்'(Covid Only) என சிகிச்சை முறைகளை செயல்படுத்தினர். மேலும் நோய் தொற்று பாதித்த நோயாளிகள் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கொரோனா இல்லாத வேறு பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை முறையில் தங்களால் இயன்றவரை பாதுகாப்பான மற்றும் தொற்று இல்லாத சூழலை உருவாக்க மருத்துவமனை தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று காந்தி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா ராவ் நேற்று தெரிவித்தார்.


latest tamil news



இது குறித்து அவர் கூறுகையில், கொரோனா இல்லாத நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். எவ்வாறாயினும், பொது மக்களிடமிருந்து எங்களுக்கு ஒத்துழைப்பு தேவை. நோயாளிகளுக்கான நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களில் சுகாதார நடவடிக்கையை பின்பற்றுவது அவசியமாகும்.


புதிய வழிகாட்டுதல்கள்: -



மாஸ்க் அணிவது அவசியம். இல்லாவிடில் அனுமதி இல்லை. வருகை நேரம் இல்லை மற்றும் ஒரு நோயாளிக்கு ஒரே ஒரு உதவியாளர் மட்டுமே இருப்பார்.

கொரோனா இல்லாத நோயாளிகளுக்கு தனி வெளியேற்றம், நுழைவு புள்ளிகள். நோயாளிகளுக்கு வழிகாட்ட விரிவான அடையாளங்கள் வைக்கப்பட்டுள்ளன.

வெளி நோயாளிகள், உள்நோயாளிகள் மற்றும் அவசர அறுவை சிகிச்சை போன்றவையும் தொடங்கப்பட உள்ளன. கொரோனா இல்லாத பகுதிகளில்

அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு சுத்திகரிப்பது ஆகியவை பின்பற்றப்பட வேண்டும். இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X