பொது செய்தி

தமிழ்நாடு

தாலிக்கு தங்கம்: ஓராண்டாக காத்திருக்கும் பயனாளிகள்

Updated : நவ 21, 2020 | Added : நவ 21, 2020
Share
Advertisement
உடுமலை: ஏழை பெண்களுக்கு, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்து ஓராண்டுக்கு மேலாக காத்திருக்கும் நிலை, ஒன்றியங்களில், தொடர்கதையாகியுள்ளது. இதனால், திட்டத்தின் மீதான நம்பிக்கை அனைத்து தரப்பிலும் குறைந்துள்ளது.தமிழகத்தில் ஏழைப்பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் திட்டம், 2011ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தாலிக்கு தங்கம்: ஓராண்டாக காத்திருக்கும் பயனாளிகள்

உடுமலை: ஏழை பெண்களுக்கு, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்து ஓராண்டுக்கு மேலாக காத்திருக்கும் நிலை, ஒன்றியங்களில், தொடர்கதையாகியுள்ளது. இதனால், திட்டத்தின் மீதான நம்பிக்கை அனைத்து தரப்பிலும் குறைந்துள்ளது.

தமிழகத்தில் ஏழைப்பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் திட்டம், 2011ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சமூக நலத்துறையின் சார்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.திட்டத்தில், பத்தாம் வகுப்பு வரை முடித்தவர்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய் மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாயும், இரண்டு பிரிவினருக்கும், எட்டு கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. ஒன்றிய அலுவலகங்களில், இதற்கான விண்ணப்பங்கள் பெற்று, சேவை மையங்களில், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

திட்டத்தில் பயன்பெறுவோரின் பெற்றோருக்கான ஆண்டு வருமானம், 72 ஆயிரமாக இருக்க வேண்டும். மேலும், திருமணத்துக்கு முன், 40 நாட்களுக்குள் திட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டத்தில், பதிவு வரிசைப்படிதான் உதவித்தொகை வழங்கப்படுகிறது.இதில், உடுமலையில் கடந்த, 2018-19ம் ஆண்டு பயனாளிகளில், ஒரு பகுதியினருக்கு மட்டுமே தொகை மற்றும் தங்க நாணயம் வழங்கப்பட்டது. தற்போது, 2019-20 நிதியாண்டு முடிந்துள்ளது.இதனால், பயனாளிகள் பலரும் ஆண்டுக்கணக்கில் காத்திருந்து வேதனையடைகின்றனர்.

திட்டத்தில் விண்ணப்பித்து, பலருக்கும் இரண்டாண்டுகளுக்கு பின்னரே அரசின் சார்பில் தொகை வழங்கப்படுகிறது.உடுமலை ஒன்றியத்தில், இரு ஆண்டுகளில் 800 பயனாளிகள்; குடிமங்கலம் ஒன்றியத்தில், 145 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்படாமல் நிலுவையுள்ளது.மேலும், திட்டத்தில் விண்ணப்பிப்போரின் விபரங்களை பதிவேற்றுவதற்கும், விரைவில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப வசதிகளை செய்வதிலும், அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது.இதனால், அரசியல் ஆதாயங்களாகவே இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.

தற்போது, உள்ளாட்சி தேர்தல் முடிந்து, பிரதிநிதிகள் பொறுப்பேற்றுள்ளதால், திட்டத்தை தகுதியில்லாதவர்களுக்கும் பயன்படுத்திக்கொள்ள அரசியல் தலையீடுகள் அதிகரிக்கும் எனவும் பயனாளிகளின் வேதனை கூடுதலாகியுள்ளது. இவ்வாறு திட்டம் தாமதமாகவே செயல்படுத்தப்படுவதால், திட்டத்தில் முழுமையாக பயன்பெற முடிவதில்லை என, பயனாளிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

ஏழை மக்களுக்கான இத்திட்டத்தை, அவர்களுக்கு அவசியமான நேரத்தில் செயல்படுத்தவும், தாமதமாகிக்கொண்டிருக்கும் உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்குவதையும் விரைவுபடுத்தாவிட்டால், திட்டம் மீதான நம்பிக்கை அனைத்து தரப்பினருக்கும் குறைந்துள்ளது.இதே போல், உதவித்தொகை பெற்றுத்தருவதாக, விண்ணப்பதாரர்களிடம், வசூல்வேட்டையில், ஈடுபடுபவர்களை கண்டறிந்து, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X