பொது செய்தி

தமிழ்நாடு

அரோகரா கோஷம் முழங்க சூரசம்ஹாரம்: கோவில்களில் சிறப்பு வழிபாடு

Added : நவ 21, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை சுற்றுப்பகுதி கோவில்களில், நேற்று சூரசம்ஹார விழா நடந்தது.உடுமலை கோவில்களில், கந்த சஷ்டி சிறப்பு வழிபாடு, கடந்த 15ம் தேதி முதல் நடக்கிறது. சுப்ரமணிய சுவாமிக்கு தினமும் சிறப்பு அபிேஷக அலங்காரத்துடன், தீபாராதனை நடக்கிறது.சூரசம்ஹார விழா நேற்று, மாலை நடந்தது. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், சுப்ரமணிய சுவாமிகள் வேல் வாங்கும் உற்சவத்துடன்,
 அரோகரா கோஷம் முழங்க சூரசம்ஹாரம்: கோவில்களில் சிறப்பு வழிபாடு

பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை சுற்றுப்பகுதி கோவில்களில், நேற்று சூரசம்ஹார விழா நடந்தது.உடுமலை கோவில்களில், கந்த சஷ்டி சிறப்பு வழிபாடு, கடந்த 15ம் தேதி முதல் நடக்கிறது. சுப்ரமணிய சுவாமிக்கு தினமும் சிறப்பு அபிேஷக அலங்காரத்துடன், தீபாராதனை நடக்கிறது.சூரசம்ஹார விழா நேற்று, மாலை நடந்தது.
உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், சுப்ரமணிய சுவாமிகள் வேல் வாங்கும் உற்சவத்துடன், மாலை, 4:00 மணிக்கு விழா துவங்கியது.தொடர்ந்து, சூரனை வதம் செய்து சம்ஹார விழா நிறைவு பெற்றது. கொரோனா தடுப்பு விதிமுறையால், கோவில் நடை அடைக்கப்பட்டு, வளாகத்தில் விழா நடந்தது. மாலையில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிகளுக்கு, அபிேஷகத்துடன், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.மடத்துக்குளம், பாப்பான்குளம் ஞானதண்டாயுதபாணி சுவாமி கோவில், போடிபட்டி முருகன் கோவில் உட்பட சுற்றுப்பகுதி கோவில்களிலும், கந்தசஷ்டி சூரசம்ஹாரத்தையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக அலங்கார பூஜை நடந்தது.பொள்ளாச்சிபொள்ளாச்சி சுப்ரமணியசுவாமி கோவிலில், சூரசம்ஹார விழாவுக்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை என, கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கோவிலில் சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களும் அனுமதிக்கப்படவில்லை.சூரசம்ஹார நிகழ்வான நேற்று, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு நடந்தது.
கோவில் வளாகத்தில், சூரசம்ஹாரம் எளிய முறையில் நடந்தது. கிணத்துக்கடவு வேலாயுதசுவாமி கோவில், முத்துமலை முருகன் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.வால்பாறைவால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் சூரசம்ஹார விழா மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கடந்த, 15ம் தேதி காலை, 7:00 மணிக்கு யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது.
அதனை தொடர்ந்து,காலை, 8:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிேஷக அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, சூரசம்ஹார திருவிழா மிக எளிமையான முறையில் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் தேவியருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X