பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சி சுவர்களில் அழகு ஓவியம் :நூற்றாண்டு விழா நினைவாக அசத்தல்

Added : நவ 21, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகராட்சி, 100வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், நகராட்சி அலுவலகத்தை புதுப்பொலிவுடன் மாற்றும் பணி நடக்கிறது.பொள்ளாச்சி நகரம், இரண்டாம் நிலை நகராட்சியாக கடந்த, 1920ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. அரசாணைப்படி, 1983 ஏப்.,1ம் தேதி தேர்வு நிலையிலிருந்து சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.பொள்ளாச்சி நகராட்சி, 100வது ஆண்டில் அடியெடுத்து
 நகராட்சி சுவர்களில் அழகு ஓவியம் :நூற்றாண்டு விழா நினைவாக அசத்தல்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகராட்சி, 100வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், நகராட்சி அலுவலகத்தை புதுப்பொலிவுடன் மாற்றும் பணி நடக்கிறது.பொள்ளாச்சி நகரம், இரண்டாம் நிலை நகராட்சியாக கடந்த, 1920ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. அரசாணைப்படி, 1983 ஏப்.,1ம் தேதி தேர்வு நிலையிலிருந்து சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.பொள்ளாச்சி நகராட்சி, 100வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில் நகராட்சியில், நுாற்றாண்டு விழா கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, நகராட்சி சுவர்களில் ஓவியங்கள் வரையப்படுகின்றன.காட்சி மாறியதுநகராட்சி அலுவலக சுற்றுச்சுவர், அரசியல் கட்சியினரின் விளம்பரங்கள், சினிமா பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அலங்கோலமாக காட்சியளித்தது. தற்போது, போஸ்டர்கள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டு, பொள்ளாச்சியின் பசுமை, வனத்தை குறிக்கும் வகையில், மான், யானை உள்ளிட்ட வனவிலங்குகள், மக்களின் வாழ்க்கை முறை குறித்த ஓவியங்களும்; சிமென்ட் கலவையில் முப்பரிமாண ஓவியங்களும் வரையப்படுகின்றன.நகராட்சி கமிஷனர் காந்திராஜ் கூறியதாவது:நகராட்சி, 100வது ஆண்டு விழாவையொட்டி, அலுவலக வளாக சுவர்களில் ஓவியங்கள் வரைதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நகராட்சி முகப்பு பகுதியில், 'குடி'மகன்கள், செடிகளை சேதப்படுத்தாமல் இருக்க கம்பி வேலியும்; அழகான ஓவியங்களும் வரையப்படுகின்றன.நகராட்சி சுவரில் வர்த்தக நிறுவனங்கள், சினிமா, அரசியல் கட்சிகளின் விளம்பர போஸ்டர்கள் அகற்றப்பட்டு ஓவியங்கள் வரையப்படுகிறது. இனி சுவர்களில் போஸ்டர் ஒட்டக்கூடாது; ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, கமிஷனர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X