ஊராட்சி தலைவர் மீது முறைகேடு புகார்: துணை தலைவர் சப் - கலெக்டரிடம் மனு

Added : நவ 21, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே எஸ்.மலையாண்டிபட்டணம் ஊராட்சி தலைவர் மீது முறைகேடு புகார் தெரிவித்து, துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.பொள்ளாச்சி அருகே, எஸ்.மலையாண்டிபட்டணம் ஊராட்சி தலைவராக அ.தி.மு.க.,வை சேர்ந்த மயில்சாமி; துணைத்தலைவராக பா.ஜ.,வை சேர்ந்த ரவி ஆகியோர் உள்ளார்.சில நாட்களுக்கு முன், ஊராட்சி தலைவர், துணை தலைவர்
 ஊராட்சி தலைவர் மீது முறைகேடு புகார்: துணை தலைவர் சப் - கலெக்டரிடம் மனு

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே எஸ்.மலையாண்டிபட்டணம் ஊராட்சி தலைவர் மீது முறைகேடு புகார் தெரிவித்து, துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.பொள்ளாச்சி அருகே, எஸ்.மலையாண்டிபட்டணம் ஊராட்சி தலைவராக அ.தி.மு.க.,வை சேர்ந்த மயில்சாமி; துணைத்தலைவராக பா.ஜ.,வை சேர்ந்த ரவி ஆகியோர் உள்ளார்.சில நாட்களுக்கு முன், ஊராட்சி தலைவர், துணை தலைவர் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ள விடுவதில்லை என புகார் தெரிவித்தார். இருவருக்கும் இடையே நடக்கும் பனிப்போரால் வளர்ச்சிப்பணிகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஊராட்சி தலைவர் மீது முறைகேடு புகார் தெரிவித்து, துணைத்தலைவர் ரவி மற்றும், 2, 3, 4 வார்டு உறுப்பினர்கள், பா.ஜ., மாவட்ட தலைவர் வசந்தராஜன், வக்கீல் துரை மற்றும் நிர்வாகிகள், சப் - கலெக்டர் அலுலகத்தில் மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:ஊராட்சி தலைவர், பாலங்கள் கட்டுவது, கொரோனா கிருமிநாசினி மருந்துகள் தெளிப்பது, குடிநீர் தொட்டி சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் முறைகேடு செய்துள்ளார். சாக்கடை இல்லாத இடங்களில் சாக்கடை சுத்தம் செய்ததாக பணம் எடுத்துள்ளார்.இது தொடர்பாக, முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு கொடுத்துள்ளோம். முறைகேடுகளுக்கு துணைத்தலைவர் கையொப்பம் போடமாட்டேன் என தெரிவித்த போது, தலைவர் மிரட்டுகிறார். இப்பிரச்னை குறித்து விசாரித்து, ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.புகார் குறித்து, ஊராட்சி தலைவரிடம் கேட்ட போது, ''பணிகள் செய்தற்கான ஆதாரங்கள் உள்ளன. பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றனர்,'' என தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X