பொது செய்தி

தமிழ்நாடு

மின் வேலி அமைத்தால் தண்டனை: வனத்துறை எச்சரிக்கை

Added : நவ 21, 2020
Share
Advertisement
ஆனைமலை;'ஆனைமலை புலிகள் காப்பக வனத்தையொட்டிய பகுதிகளில், மின் வேலி அமைக்கக்கூடாது. மீறினால் சிறை தண்டனை விதிக்கப்படும்,' என, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகம் முழுவதிலும், நாளுக்கு நாள் யானைகள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. மின் வேலிகளில் சிக்கி மரணிப்பது, கிணறுகளிலும், ஆழமான குழிகளிலும் தவறி விழுந்து யானைகள் இறப்பது, தொடர்ந்து
 மின் வேலி அமைத்தால் தண்டனை: வனத்துறை எச்சரிக்கை

ஆனைமலை;'ஆனைமலை புலிகள் காப்பக வனத்தையொட்டிய பகுதிகளில், மின் வேலி அமைக்கக்கூடாது. மீறினால் சிறை தண்டனை விதிக்கப்படும்,' என, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகம் முழுவதிலும், நாளுக்கு நாள் யானைகள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. மின் வேலிகளில் சிக்கி மரணிப்பது, கிணறுகளிலும், ஆழமான குழிகளிலும் தவறி விழுந்து யானைகள் இறப்பது, தொடர்ந்து நடக்கிறது.நேற்று முன்தினம், தர்மபுரியில், 50 அடி ஆளமுள்ள கிணற்றில் விழுந்த குட்டி யானையை, தீயணைப்புத்துறை, வனத்துறையினர், 15 மணி நேரம் போராடி மீட்டனர். இதையடுத்து, ஆனைமலை புலிகள் காப்பகத்தில், யானைகளின் பாதுகாப்பு கருதி, வனத்தையொட்டிய பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு, வனத்துறையினர் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி, எச்சரித்து வருகின்றனர்.ஆனைமலை புலிகள் காப்பக கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன், துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் அறிக்கை:விவசாயிகள் வனத்தையொட்டிய பகுதிகளில், 'சோலார்' மின் வேலி மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேலி அமைக்கும் முன் வனத்துறைக்கு கட்டாயம் தகவல் தெரிவிக்க வேண்டும். மின்சார வேலி அமைப்பது சட்டப்படி குற்றமாகும்.அதேபோல், யானைகள் புகுவதை தடுக்க வனத்துறை அமைத்துள்ள, அகழியை மூடக்கூடாது. திறந்த நிலையிலுள்ள கிணறுகளில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும், அதிக ஆழத்தில் குழிகள் தோண்டுவதை தவிர்க்க வேண்டும். காப்புக்காட்டிலுள்ள மரங்கள் கடத்தல், ஆற்றுப்படுகையில் மண் திருட்டு, வனவிலங்கு வேட்டையில் ஈடுபடக்கூடாது.அத்துமீறலால் வனவிலங்குகள் பாதிக்கப்பட்டாலோ, குற்றங்கள் கண்டறியப்பட்டாலோ, வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி, அதிகபட்ச அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படும்.இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X