மாயமான மேய்ச்சல் நிலங்கள்:கால்நடை வளர்ப்போர் அதிருப்தி

Added : நவ 21, 2020
Share
Advertisement
உடுமலை;உடுமலை சுற்றுப்பகுதிகளில், விவசாயத்துக்கு இணையாக கால்நடை வளர்ப்பும் முக்கிய தொழிலாக உள்ளது. சொந்தமாக விளைநிலங்கள், இல்லாத கால்நடை வளர்ப்போர், பசுந்தீவன தேவைக்காக, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்வது வழக்கம். இவ்வாறு, கால்நடைகளின் தேவை கருதி, கிராமங்களில், மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் வகைப்படுத்தப்பட்டு வருவாய்த்துறை, கால்நடைத்துறை கட்டுப்பாட்டில்

உடுமலை;உடுமலை சுற்றுப்பகுதிகளில், விவசாயத்துக்கு இணையாக கால்நடை வளர்ப்பும் முக்கிய தொழிலாக உள்ளது. சொந்தமாக விளைநிலங்கள், இல்லாத கால்நடை வளர்ப்போர், பசுந்தீவன தேவைக்காக, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்வது வழக்கம். இவ்வாறு, கால்நடைகளின் தேவை கருதி, கிராமங்களில், மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் வகைப்படுத்தப்பட்டு வருவாய்த்துறை, கால்நடைத்துறை கட்டுப்பாட்டில் இருந்தன.தற்போது, உடுமலை பகுதியில், இவ்வகை மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள், ஆக்கிரமிப்பு, இலவச வீட்டு மனை பட்டாவுக்கு கையகப்படுத்துதல் உட்பட காரணங்களால், முற்றிலுமாக காணாமல் போய்விட்டது.இதே போல், இருபுறங்களிலும், பல்வேறு மரம், புல்வகைகள் செழித்து வளரும், விளைநிலங்களுக்கு செல்லும் மண்பாதைகளும், மேய்ச்சலுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தன. இத்தகைய பாதைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டன.இதனால், வாய்க்கால் பாதைகள், நிலங்களின் வரப்புகள், மண் பாதைகள் ஆகியவையே கால்நடைகளின் பசுந்தீவன தேவையை பூர்த்தி செய்வதாக அமைந்துள்ளன. அதிலும், களைக்கொல்லி தெளித்து, செடிகளை, அழித்து விடுகின்றனர்.கால்நடை வளர்ப்போர் கூறியதாவது: பால் உற்பத்திக்கான மாடுகளுக்கு அளிக்கப்படும் புண்ணாக்கு, மக்காச்சோள மாவு உட்பட தீவனங்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. எனவே, மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்லும் போது, கால்நடைகள் உண்ணும் பசுந்தீவனமே, பால் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ளது. ஆனால், மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் இருந்ததற்கான சுவடுகளே தற்போது கிராமங்களில் இல்லை. இத்தகைய நிலங்களை வகை மாற்றம் செய்தால், அதற்கேற்ப மாற்று இடம் அளிக்க வேண்டும் என்ற விதியும் கண்டுகொள்ளப்படவில்லை.எனவே, கால்நடைத்துறை, வருவாய்த்துறை இணைந்து, மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X