பொது செய்தி

தமிழ்நாடு

கிளை நுாலகம் டிஜிட்டல் மயமாகுமா? உடுமலை வாசகர் வட்டம் எதிர்பார்ப்பு

Added : நவ 21, 2020
Share
Advertisement
உடுமலை:உடுமலை, முதற்கிளை நுாலகத்தை அதிகாரப்பூர்வமாக டிஜிட்டல் மயமாக நடைமுறைப்படுத்துவதை வாசகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.உடுமலை முதற்கிளை நுாலகத்தில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நுால்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நுாலகத்தின் செயல்பாடுகள் மற்றும் வாசகர்களின் பயன்பாடு அதிகரித்ததால், தொழில்நுட்ப வசதிகளும் மேம்படுத்த தொடர்ந்து கோரிக்கை

உடுமலை:உடுமலை, முதற்கிளை நுாலகத்தை அதிகாரப்பூர்வமாக டிஜிட்டல் மயமாக நடைமுறைப்படுத்துவதை வாசகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.உடுமலை முதற்கிளை நுாலகத்தில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நுால்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நுாலகத்தின் செயல்பாடுகள் மற்றும் வாசகர்களின் பயன்பாடு அதிகரித்ததால், தொழில்நுட்ப வசதிகளும் மேம்படுத்த தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.இதையடுத்து, திருப்பூர் மாவட்டத்தில், தாலுகா அளவில் உள்ள நுாலகங்களில், இடவசதி, புரவலர்கள், வாசகர்கள் மற்றும் நுாலகத்தின் செயல்பாடுகளின் அடிப்படையில், உடுமலை முதற்கிளை நுாலகம் 'டிஜிட்டல் நுாலகமாக', மாற்றுவதற்கு, 2018, ஜூன் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இத்திட்டத்துக்கு, அரசு, 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.இந்த டிஜிட்டல் நுாலக திட்டத்தில், மாற்றுத்திறன் மற்றும் பெண்களுக்கான சிறப்பு பிரிவுகள், போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு, 'ப்ரொஜக்டர்' வசதி ஏற்படுத்துதல், நுாலக செயல்பாடுகளை கம்ப்யூட்டர் மயமாக்குதல், கண்பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு 'பிரெய்லி முறை' மற்றும், கூடுதல் கம்ப்யூட்டர் வசதிகளும் வழங்குவதும் உள்ளது.டிஜிட்டல் நுாலகமாக மாற்றுவதற்கு, தரைதளம் மேம்படுத்துதல், கூடுதல் அறைகள், குழந்தைகளுக்கான அறைகள், கூட்ட அரங்கம் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளது.மேலும், நுாலகத்தின் பெயர் பலகையும் மாதிரி நுாலகம் என மாற்றப்பட்டுள்ளது.பணிகள் நிறைவு பெற்று பல மாதங்களாகியும், டிஜிட்டல் நுாலமாக மாற்றப்படாமல் இருப்பதால், வாசகர்கள் அதிருப்தியடைந்தனர். கொரோனா பாதிப்புகள் குறைந்து, தளர்வுகளின் அடிப்படையில் நுாலகங்களும் திறக்கப்பட்டுள்ளன.பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி, டிஜிட்டல் நுாலகமாக முழுமையாக செயல்படுத்தவும், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிட வேண்டுமென வாசகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X