மறியலில் ஈடுபட்ட தி.மு.க.,வினர் கைது| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மறியலில் ஈடுபட்ட தி.மு.க.,வினர் கைது

Added : நவ 21, 2020
Share
பொள்ளாச்சி:தடையை மீறி பிரசாரத்தில் ஈடுபட்ட, தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதியை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டதை கண்டித்து, பொள்ளாச்சி காந்தி சிலை அருகே, கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ் தலைமை வகித்தார்.நகர பொறுப்பாளர் வரதராஜ், மாநில விவசாய அணி துணைத்தலைவர் தமிழ்மணி மற்றும் நிர்வாகிகள்

பொள்ளாச்சி:தடையை மீறி பிரசாரத்தில் ஈடுபட்ட, தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதியை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டதை கண்டித்து, பொள்ளாச்சி காந்தி சிலை அருகே, கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ் தலைமை வகித்தார்.நகர பொறுப்பாளர் வரதராஜ், மாநில விவசாய அணி துணைத்தலைவர் தமிழ்மணி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். அனுமதியின்றி மறியலில் ஈடுபட்ட, 89 பேரை போலீசார் கைது செய்தனர். சூளேஸ்வரன்பட்டியில் மறியலில் ஈடுபட்ட, 10 பேரை கைது செய்தனர்.இதேபோன்று, வால்பாறை காந்தி சிலை வளாகத்தில், தி.மு.க., நகர பொறுப்பாளர் பால்பாண்டி தலைமையில் மறியலில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் உட்பட, 27 பேரை போலீசார் கைது செய்தனர்.உடுமலைஉடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, நேற்று மாலை மடத்துக்குளம் எம்.எல்.ஏ., ஜெயராமக்கிருஷ்ணன் தலைமையில், சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.,வினர் 300 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X