பொது செய்தி

தமிழ்நாடு

மானிய உரத்தில் விதிமீறினால் உரக்கடை உரிமம் ரத்தாகும்! உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

Added : நவ 21, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி;ஆனைமலை, கணபதிபாளையம் அருகே, தனியார் கம்பெனியில், அரசு மானியத்தில் வழங்கப்பட்ட யூரியா உரம் பயன்படுத்தி, சட்ட விரோதமாக 'பிளைவுட் பசை' தயாரிக்கப்பட்டது, 18ம் தேதி கண்டறியப்பட்டது.இதையடுத்து, 'டி பிக்ஸ்' என்ற கம்பெனி பூட்டி 'சீல்' வைக்கப்பட்டு, 42 டன் யூரியா உரம் பறிமுதல் செய்யப்பட்டது. கம்பெனிக்கு பல மாவட்டங்களிலுள்ள உரக்கடைக்காரர்கள், சட்ட விரோதமாக
 மானிய உரத்தில் விதிமீறினால் உரக்கடை உரிமம் ரத்தாகும்! உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

பொள்ளாச்சி;ஆனைமலை, கணபதிபாளையம் அருகே, தனியார் கம்பெனியில், அரசு மானியத்தில் வழங்கப்பட்ட யூரியா உரம் பயன்படுத்தி, சட்ட விரோதமாக 'பிளைவுட் பசை' தயாரிக்கப்பட்டது, 18ம் தேதி கண்டறியப்பட்டது.இதையடுத்து, 'டி பிக்ஸ்' என்ற கம்பெனி பூட்டி 'சீல்' வைக்கப்பட்டு, 42 டன் யூரியா உரம் பறிமுதல் செய்யப்பட்டது.
கம்பெனிக்கு பல மாவட்டங்களிலுள்ள உரக்கடைக்காரர்கள், சட்ட விரோதமாக யூரியா உரம் விற்பனை செய்தது, விசாரணையில் தெரியவந்துள்ளது.இதையடுத்து, உரம், பூச்சிக்கொல்லி விற்பனை செய்யும் கடைக்காரர்களுக்கு, நேற்று முன்தினம், பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய வேளாண் அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது.கோவை வேளாண் தரக்கட்டுப்பாடு, உதவி இயக்குனர் புனிதா, வேளாண் அலுவலர் சக்திவேல் தலைமை வகித்தனர். பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதிகளில் இருந்து வந்த, 59 உரக்கடை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.உதவி இயக்குனர் புனிதா, வேளாண் அலுவலர் சக்திவேல் ஆகியோர் பேசியதாவது:விவசாயிகளுக்கு, ஆதார் எண் பெற்று, விற்பனை முனை இயந்திரம் மூலம் மட்டுமே, உரம் விற்பனை செய்ய வேண்டும்.
ஒரு டன் அளவுக்கு உரம் பெறும், பெரிய விவசாயிகளிடம் கட்டாயம் நில ஆவணங்கள் பெற வேண்டும்.பதிவேடுகள் முறையாக பராமரிக்க வேண்டும். தனியார் கம்பெனிகளுக்கு, சட்ட விரோதமாக மானிய உரங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், உரக்கட்டுப்பாடு சட்டம் மற்றும் பூச்சி மருந்து சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, அபராதத்துடன், ஏழு ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை விதிக்கப்படும். அரசு மானிய உரத்தை தனியாருக்கு விற்பனை செய்வதை, உரக்கடை உரிமையாளர்கள் கைவிட வேண்டும்.இவ்வாறு, பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X