சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வருவாய் நிலம் ஆக்கிரமிப்பு: அதிரடி மீட்பு

Added : நவ 21, 2020
Share
Advertisement
பந்தலுார்:பந்தலுார் அய்யன்கொல்லி பகுதியில் தட்டாம்பாறை பகுதியில், வருவாய் நிலம் ஆக்கிரமிப்பு குறித்து நேரடி ஆய்வு நடந்தது.பந்தலுார் அருகே அய்யன்கொல்லி பகுதியில் தட்டாம்பாறை பகுதி அமைந்துள்ளது. இங்கு வருவாய் துறைக்கு உட்பட்ட, 4 ஏக்கர் நிலம் அமைந்துள்ளது. இங்கு, பிதர்காடு வனத்துறை மூலம் மூங்கில் மற்றும் பல்வகை மரங்கள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு
 வருவாய் நிலம் ஆக்கிரமிப்பு: அதிரடி மீட்பு

பந்தலுார்:பந்தலுார் அய்யன்கொல்லி பகுதியில் தட்டாம்பாறை பகுதியில், வருவாய் நிலம் ஆக்கிரமிப்பு குறித்து நேரடி ஆய்வு நடந்தது.பந்தலுார் அருகே அய்யன்கொல்லி பகுதியில் தட்டாம்பாறை பகுதி அமைந்துள்ளது. இங்கு வருவாய் துறைக்கு உட்பட்ட, 4 ஏக்கர் நிலம் அமைந்துள்ளது. இங்கு, பிதர்காடு வனத்துறை மூலம் மூங்கில் மற்றும் பல்வகை மரங்கள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், இப்பகுதியை சேர்ந்த பலர், 2 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை ஏற்கனவே ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்புகள் கட்டி, விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இப்பகுதி இளைஞர்கள் இணைந்து, இங்கு மைதானம் அமைத்து ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வந்தனர்.இங்கு, போஜன் என்பவர் இங்குள்ள இடத்தை ஆக்கிரமித்து, குடிசை அமைத்தார். புகாரின் பேரில், தாசில்தார் மகேஸ்வரி தலைமையிலான வருவாய் துறையினர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த கதிரவன் தலைமையிலானபோலீசார், வனச்சரகர் மனோகரன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து, குடிசை மற்றும் இடம் மீட்கப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.மேலும், 'மாவட்ட கலெக்டரிடம் முறைப்படி விண்ணப்பித்து, அனுமதியளித்தால் மட்டுமே, விளையாட்டு மைதானத்தை பயன்படுத்த வேண்டும்,' என, இளைஞர்களுக்கு அறிவுறுத்தினர்.அதிகாரிகள் கூறுகையில், ' இங்கு நடந்த அத்துமீறல்கள் குறித்து, போலீசார்; வனத்துறை சார்பில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருவாய் நிலங்கள் அனைத்தும் விரைவில் மீட்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X