சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சூழ்ந்து கொட்டிய தேனீக்கள் தொழிலாளி படுகாயம்: தீவிர சிகிச்சை

Added : நவ 21, 2020
Share
Advertisement
குன்னுார்:குன்னுார் அருகே கோடமலையில், தொழிலாளியை தேனீக்கள் சூழ்ந்து கொட்டியதால், படுகாயம் அடைந்தார்.நீலகிரி மாவட்டம், குன்னுார் சோலடாமட்டம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி செல்வநாதன்,64. இவர் நேற்று கோடமலை எஸ்டேட் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த தேனீ கூண்டு கலைந்து இவரை சூழ்ந்து கொட்டியதால் படுகாயமடைந்தார்.ஆபத்தான நிலையில், 108
 சூழ்ந்து கொட்டிய தேனீக்கள்  தொழிலாளி படுகாயம்: தீவிர சிகிச்சை

குன்னுார்:குன்னுார் அருகே கோடமலையில், தொழிலாளியை தேனீக்கள் சூழ்ந்து கொட்டியதால், படுகாயம் அடைந்தார்.நீலகிரி மாவட்டம், குன்னுார் சோலடாமட்டம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி செல்வநாதன்,64. இவர் நேற்று கோடமலை எஸ்டேட் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த தேனீ கூண்டு கலைந்து இவரை சூழ்ந்து கொட்டியதால் படுகாயமடைந்தார்.ஆபத்தான நிலையில், 108 ஆம்புலென்ஸ் ஊழியர்கள் அவரை மீட்டு, குன்னுார் அரசு லாலி மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன், வனச்சரகர் சசிகுமார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனால், கோடமலை எஸ்டேட் பகுதி தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். தேனீக்களை விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X