பொது செய்தி

தமிழ்நாடு

நீலகிரியில் நான்கு பேர் மருத்துவ படிப்பில் சேர தகுதி

Added : நவ 21, 2020
Share
Advertisement
ஊட்டி:நீலகிரியில், 4 பேர் மருத்துவ படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர்.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி, தமிழக அரசு அரசாணை நிறைவேற்றியது. 'இதன் மூலம் எம்.பி.பி.எஸ்., படிப்பில், 313 இடங்களும், பி.டி.எஸ்., படிப்பில், 92 இடங்கள்,' என, மொத்தம், 405 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு

ஊட்டி:நீலகிரியில், 4 பேர் மருத்துவ படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர்.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி, தமிழக அரசு அரசாணை நிறைவேற்றியது. 'இதன் மூலம் எம்.பி.பி.எஸ்., படிப்பில், 313 இடங்களும், பி.டி.எஸ்., படிப்பில், 92 இடங்கள்,' என, மொத்தம், 405 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், 20-20-21ம் கல்வியாண்டிற்கான மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று முன்தினம் துவங்கியுள்ளது.அதில், நீலகிரியில், அம்பலமூலா அரசு மேல்நிலை பள்ளி மாணவர் நித்தின்; கூடலூர் அரசு மேல்நிலை பள்ளி மாணவி தாரா; மஞ்சூர் அரசு மேல்நிலை பள்ளி மகிதா மற்றும் ஊட்டி அரசு மேல்நிலை பள்ளியில் படித்து வந்த பழங்குடியின மாணவி பிரியா ஆகியோர் மருத்துவ படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X