ஊட்டி;'நீலகிரியில், வளம் சார்ந்த வங்கி கடன், 4,046 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது,' என,தெரிவிக்கப்பட்டுள்ளது.ஊட்டி பிங்கர் போஸ்டில் உள்ள, கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில், வங்கியாளர் கூட்டம்நடந்தது. வங்கிகடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு கலெக்டர்இன்னசென்ட் திவ்யா பேசியதாவது:தேசிய விவசாயமற்றும் கிராமப்புற வங்கியில், (நபார்டு) 2021--2022ம் ஆண்டிற்கான, நீலகிரி மாவட்டத்தின் வளம் சார்ந்த வங்கி கடன், 4,046.63 கோடி ரூபாய் என,நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இது நடப்பாண்டின் திட்டத்தை காட்டிலும, 11.44 சதவீதம் கூடுதலாகும். அதில், விவசாயத்திற்கான வங்கிகடன், 2,773.99 கோடி ரூபாய், அதிகபட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தில் மூலதனம் உருவாக்கும் விதமாக, வங்கிகடன் அளிக்க வேண்டும். அரசாங்கத்தின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்களை அமல்படுத்துவது அவசியமாகும்.மேலும், விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் வங்கிகள் நீண்ட கால விவசாய கடன்கள் வழங்க வேண்டும். விவசாயத்தில் இழப்புகளை ஈடுசெய்ய வங்கிகள் கடன் பெறுகின்ற மற்றும் கடன் பெறாத விவசாயிகளை பயிர்கடன் திட்டத்தின் கீழ், இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வங்கிகள், தாழ்த்தப்பட்டோர்; மலைவாழ் மக்களுக்கான கடன்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வங்கிகடன் வழங்கி வாழ்வாதாரம் பாதுகாக்க உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசினார்.இதில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் பாபு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்யராஜா, நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் திருமலைராவ், தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்ரமணியம் சாம்ராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE