அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு இனி முன்னேற்றமே! தேசிய மகளிர் அணி தலைவர் வானதி பேட்டி

Added : நவ 21, 2020
Share
Advertisement
கோவை:''பா.ஜ.,வுக்கு இனிமேல் பின்னடைவு என்பது தமிழகத்தில் கிடையாது; முன்னேற்றம் மட்டும் தான்,'' என, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.பா.ஜ.,தேசிய மகளிர் அணி தலைவராக பொறுப்பேற்ற பின், நேற்று கோவை வந்த வானதி சீனிவாசன், விமானநிலையத்தில் அளித்த பேட்டி:வங்கி கணக்கு முதல் ராணுவத்தில் சேருவது வரை ஒவ்வொரு நிலையிலும், மத்திய அரசு பெண்களுக்கு முக்கியத்துவம்
 தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு இனி முன்னேற்றமே! தேசிய மகளிர் அணி தலைவர் வானதி பேட்டி

கோவை:''பா.ஜ.,வுக்கு இனிமேல் பின்னடைவு என்பது தமிழகத்தில் கிடையாது; முன்னேற்றம் மட்டும் தான்,'' என, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.பா.ஜ.,தேசிய மகளிர் அணி தலைவராக பொறுப்பேற்ற பின், நேற்று கோவை வந்த வானதி சீனிவாசன், விமானநிலையத்தில் அளித்த பேட்டி:வங்கி கணக்கு முதல் ராணுவத்தில் சேருவது வரை ஒவ்வொரு நிலையிலும், மத்திய அரசு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. பிரதமர், பெண்களுக்கு ஒவ்வொரு நிலையிலும் முன்னேற்றம் இருக்க வேண்டும் என விரும்புபவர். பெண்களின் கதாநாயகனாக அவர் இருக்கிறார். அகில இந்திய அளவில் மகளிருக்கான திட்டங்களை கொண்டு சேர்ப்பது எங்களது பணி.தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன், 'வெற்றிவேல் யாத்திரை' நடத்திக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி ஏற்படுவதையே மாற்றமாக பார்க்கிறோம். தற்போதுள்ள கூட்டணியில் எந்த மாற்றமும் கிடையாது. கூட்டணி வலுவாக இருக்கிறது.ஆனால், ஒவ்வொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற விருப்பம் உண்டு. அந்த விருப்பம் பா.ஜ.,வுக்கும் உண்டு. தொகுதி உடன்பாடு குறித்து, கட்சியின் தலைமை தகுந்த நேரத்தில் அறிவிக்கும்.தமிழகத்தில் தொடர்ச்சியாக ஹிந்து மத நம்பிக்கையையும், ஹிந்து தெய்வங்களையும் மட்டுமே கொச்சைப்படுத்தி பேசி வரும் நிலையை, மாற்றவே வேல் யாத்திரை நடத்தி வருகிறோம். ஒரு யாத்திரையை நடத்த எந்த கட்சிக்கும் சட்டப்பூர்வமான உரிமை உண்டு. அந்த உரிமையை தொடர்ச்சியாக புறக்கணித்து வந்தால், மக்கள் இடையே எதிர்விளைவுகளை உண்டாக்கும் என்று தான், நான் கூறியுள்ளேன்.ஹிந்துக்களை சீண்டிப்பார்க்கும் அரசியல் கட்சி தலைவர்களை பற்றி மக்களிடம் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இந்த யாத்திரை. பா.ஜ.,வுக்கு இனிமேல் பின்னடைவு என்பது, தமிழகத்தில் கிடையாது; முன்னேற்றம் மட்டும் தான்.இவ்வாறு, வானதி சீனிவாசன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X