தமிழ்நாடு

வாய்ப்பு: திண்டிவனம் புதிய பஸ் நிலையத்திற்கு கூடுதல்...டெண்டர் விதிகளில் தளர்வு: அதிகாரிகள் தீவிரம்

Added : நவ 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
திண்டிவனம்; திண்டிவனத்தில் தனியார் பங்களிப்புடன் 20 கோடி ரூபாய் செலவில், புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டு ஒரு ஆண்டை கடந்துவிட்ட நிலையில், இதுவரை புதிய பஸ் நிலையம் அமையாமல் இருப்பது பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.திண்டிவனத்தில், நகராட்சிக்கு சொந்தமான இந்திரா காந்தி பஸ் நிலையம் அமைக்கப்பட்டு, 40 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.
 வாய்ப்பு:  திண்டிவனம் புதிய பஸ் நிலையத்திற்கு கூடுதல்...டெண்டர் விதிகளில் தளர்வு: அதிகாரிகள் தீவிரம்

திண்டிவனம்; திண்டிவனத்தில் தனியார் பங்களிப்புடன் 20 கோடி ரூபாய் செலவில், புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டு ஒரு ஆண்டை கடந்துவிட்ட நிலையில், இதுவரை புதிய பஸ் நிலையம் அமையாமல் இருப்பது பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டிவனத்தில், நகராட்சிக்கு சொந்தமான இந்திரா காந்தி பஸ் நிலையம் அமைக்கப்பட்டு, 40 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. ரயில்வே மேம்பாலத்தையொட்டியுள்ள நகராட்சி பஸ் நிலையத்திற்குள் அனைத்து மார்க்கங்களிலிருந்து வரும் வாகனங்கள் உள்ளே வந்து வெளியே செல்வதற்கு இட வசதி கிடையாது.இதனால், திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் அனைத்து பஸ்களும், பயணிகளை ஏற்றி, இறக்கிவிட்டுச் செல்லவேண்டிய நிலை பல ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. பஸ்கள் வந்து செல்வதற்கு போதிய இடவசதி இல்லாததால் பயணிகள் சிரமம் அடைகின்றனர்.மேம்பாலத்தின் கீழ் திறந்த வெளி இடத்தில் பஸ்கள் நின்று செல்வதால், மழைக்காலங்களில் ஒதுங்கி நிற்க இடமின்றி பயணிகள் அவதியடைந்து வந்தனர். .இதனை கருத்தில் கொண்டு பஸ் நிலையத்திற்கு, கடந்த 2001ல் திண்டிவனம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல்., டவர் அருகே 6 ஏக்கர் இடத்தை தேர்வு செய்து, நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது.நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிய பஸ் நிலையம் கட்டுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது.

கடந்த 2013ல் புதிய பஸ் நிலையம் கட்ட 15 கோடி ரூபாய் ஒதுக்கியதாக சட்டசபையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஜெ., அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் கடந்த ஆண்டு, சட்டத்துறை அமைச்சர் சண்முகம் நடவடிக்கை எடுத்ததன் பேரில், நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தனியார் பங்களிப்புடன் 20 கோடி ரூபாய் செலவில் பஸ் நிலையம் அமைக்க அரசு கொள்கை அனுமதி அளித்து கடந்த ஆண்டு அக்., மாதத்தில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நவ.,1ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் மக்களிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டது.கருத்து கேட்பு கூட்டத்திற்கு பிறகு, கடந்த ஜன.,30ம் தேதி தனியார் பங்களிப்புடன் திண்டிவனத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான டெண்டர் வெளியிடப்பட்டது. இதுவரை தொடர்ந்து மூன்று முறை டெண்டர் வெளியிடப்பட்டும், புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான டெண்டரில் யாரும் பங்கேற்கவில்லை.தனியார் பங்களிப்புடன் திண்டிவனத்தில் பஸ் நிலையம் கட்டுவதற்கான டெண்டர் வெளியிட்டது போல், திருவண்ணாமலை, திருமங்கலம், மயிலாடுதுறை, காஞ்சிபுரம், தர்மபுரி, திருத்தனி உள்ளிட்ட இடங்களிலும் தனியார் பங்களிப்புடன் கட்டுவதற்கு டெண்டர் வெளியிடப்பட்டும், பஸ் நிலையம் கட்டுவதற்கான எந்த வேலையும் நடக்கவில்லை.திண்டிவனத்தில் தனியார் பங்களிப்புடன் பஸ் நிலையம் கட்டுவதற்கு உள்ள சிக்கல்கள் குறித்து நகராட்சி அதிகாரிகள் தரப்பில் கேட்ட போது, '' பஸ்நிலையம் கட்டுவதற்கு டெண்டர் எடுப்பவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளில் சிக்கல் இருப்பதால், டெண்டரை யாரும் எடுக்காமல் இருக்கின்றனர்.

குறிப்பாக டெண்டர் எடுப்பவர்கள் ஏற்கனவே ரூ.15 கோடி செலவில் பஸ் நிலையம் கட்டியிருக்க வேண்டும். அல்லது ரூ.40 கோடி செலவில் ஒப்பந்த பணிகள் செய்து முடித்து இருக்க வேண்டும் உள்ளிட்ட தகுதிகள் இருந்தால்தான், டெண்டரை எடுக்க முடியும். இந்த விதிமுறைக்கு யாரும் ஒத்து வராததால் டெண்டர் போடாமல் உள்ளனர். டெண்டர் எடுப்பவர்களுக்கான விதிமுறைகளை, தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம்(டி.என்.ஐ.டி.பி.) வடிவமைத்துள்ளது. இந்த விதிமுறைகளுக்கு ஒத்து போகிறவர்கள் மட்டுமே டெண்டர் எடுக்க முடியும் என்பதால், திண்டிவனத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு யாரும் டெண்டர் போடாமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திண்டிவனத்தை போலவே, தமிழகத்தில் உள்ள 7 இடங்களில் தனியார் பங்களிப்புடன் பஸ் நிலையம் கட்டுவதற்கான பணிகள் தடைபட்டுள்தால், தமிழக அரசின் நிதி மற்றும் செலவினங்களுக்கான செயலர் மூலம், ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள விதிகளில் தளர்வு செய்து, புதிய விதிமுறைகளை இறுதி செய்வதில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். புதிய விதிகளின் அடிப்படையில் டெண்டர் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக, நகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். விதிகளில் தளர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியான உடன், திண்டிவனத்தில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான டெண்டர் வெளியாகும். அதன் பிறகுதான் திண்டிவனத்தில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்க வாய்ப்பு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
21-நவ-202007:46:42 IST Report Abuse
a natanasabapathy கமிஷன் பிரச்சினையாக இருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X