பாக்கி.,ல் 1,300 ஆண்டுகளுக்கு முந்தைய விஷ்ணு கோயில்

Updated : நவ 21, 2020 | Added : நவ 21, 2020 | கருத்துகள் (31) | |
Advertisement
பெஷாவர்: வட மேற்கு பாகிஸ்தானின் ஸ்வாட் மாவட்டத்தில் 1,300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட விஷ்ணு கோயிலை பாகிஸ்தான் மற்றும் இத்தாலிய தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா தொல்லியல் துறையைச் சேர்ந்தவர் பசல் காலிக். இத்தாலிய தொல்பொருள் திட்ட தலைவர் டாக்டர் லுகா என்பவருடன் ஸ்வாட் மாவட்டத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். பாரிகோட் குந்தை
LordVishnu, Temple, Pakistan, Discovered, விஷ்ணு, கடவுள், கோயில், பாகிஸ்தான், கண்டுபிடிப்பு

பெஷாவர்: வட மேற்கு பாகிஸ்தானின் ஸ்வாட் மாவட்டத்தில் 1,300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட விஷ்ணு கோயிலை பாகிஸ்தான் மற்றும் இத்தாலிய தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா தொல்லியல் துறையைச் சேர்ந்தவர் பசல் காலிக். இத்தாலிய தொல்பொருள் திட்ட தலைவர் டாக்டர் லுகா என்பவருடன் ஸ்வாட் மாவட்டத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். பாரிகோட் குந்தை எனும் பகுதியில் அகழாய்வில் ஈடுபட்ட போது 1,300 ஆண்டுகளுக்கு முன்பு ஹிந்து ஷாஹி மன்னர்களின் காலத்தில் கட்டப்பட்ட விஷ்ணு கோயிலை இவர்கள் கண்டறிந்தனர். ஹிந்து ஷாஹி அல்லது காபூல் ஷாஹி என்பவர்கள் 850 முதல் 1026 வரை காபூல் பள்ளத்தாக்கு, பாகிஸ்தான், வடமேற்கு இந்தியா பகுதிகளை ஆண்டுள்ளனர்.


latest tamil newsதொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கோயில் இடத்திற்கு அருகில் தற்காலிக ராணுவ முகாம், கண்காணிப்பு கோபுரங்களும் இருந்துள்ளன. மேலும் கோயிலுக்கு அருகில் ஒரு தண்ணீர் தொட்டி இருந்துள்ளது. பக்தர்கள் கோயிலுக்குள் வருகையில் சுத்தப்படுத்திக்கொள்ள அவை அமைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
ஸ்வாட் மாவட்டத்தில் ஆயிரமாண்டு பழமையான பல்வேறு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உண்டு. ஆனால் தற்போது தான் முதல் முறையாக ஹிந்து ஷாஹி கால தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளது. புத்த மத கோயில்கள் பலவும் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P Ramanathan - Chennai,இந்தியா
22-நவ-202018:29:06 IST Report Abuse
P Ramanathan படிப்படியாக எல்லா வியாபாரத்திலும் தமிழக இந்துக்கள் வரவேண்டும் அதுதான் அதுதான் எல்லா அதிகாரத்தையும் தரும்
Rate this:
Cancel
Krish - Bengalooru,இந்தியா
21-நவ-202021:01:24 IST Report Abuse
Krish இந்துக்களே விழித்தெழுவுங்கள் இப்படியே இந்த திராவிட கட்சிகளுக்கு அதுவும் 'திருடர்கள் முன்னேற்ற கழகத்திற்கு சப்போர்ட் பண்ணினால் , நம் தமிழகமும் 'இப்படியே ஆகும் , 'தொல்பொருள் ஆராட்சியாளர்கள்தான் அடையாளம் காண்பிப்பார்கள் ' அப்த இடங்களில் இருந்தது எல்லாம் இந்துக்களே .இப்போது மருந்துக்கு கூட இந்துக்களை காண்பது அறிவு . இந்துக்களே இதை மனத்தில் வைத்துக்கொள் ." இந்தியா, ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், வங்கதேசம், இங்கு எல்லாம் இந்துக்களின் பல அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன... பல பெரிய மசூதிகள் கோவில்களை அழித்தே கட்டப்பட்டிருக்கும்.. சனாதன தர்மம் நன்றாக பரவி இருந்தது...' ஆனால் நம் இந்தியாவில் இந்துக்கள் எவ்வளவு பரந்தமானம் உடையவர்கள் என்பதை உணருங்கள் . பாகிஸ்தானில் நாடு விடுதலை பொது இந்துக்கள் மூன்றில் ஒரு பங்கு ,இப்போது அவர்கள் ஜனத்தொகை ' ஸீரோ ' எங்கே போனார்கள் ??
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
21-நவ-202019:38:05 IST Report Abuse
Bhaskaran உலகின் மிகப்பெரிய சூரியன் கோவில் மூல்தானில் ( மூலஸ்தானபுரம் ) இருந்தது இதனை ஸ்ரீகிருஷ்ணரின் மகன் சாம்பன் காட்டினார் .விக்ரகம் தங்க n செய்யப்பட்டிருந்தது கண்கள் விலைமதிப்பில்லாத வைரங்களை கொண்டிருந்தது .பின்னாளில் நிர்மூலமாக்கப்பட்டது .இன்று அந்த ஆலயமும் ஆக்கிரமிப்பானது .யு டியூபில் பார்க்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X