சென்னை: உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வரவுள்ள நிலையில் அவர் குறித்து இன்று பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் டுவிட்டரிலும் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் பதிவாகி வருகிறது.

பா.ஜ.,வில் அகில இந்திய தலைவராக இருந்த போது நாடு முழுவதும் பா.ஜ., அலையை ஏற்படுத்தி மோடிக்கு பெரும் செல்வாக்கை உயர்த்துவதில் இவர் முக்கிய காரணியாக இருந்தார். மேலும் மோடியின் நம்பிக்கைக்கு பாத்திரமான அவரிடம் தான் அனைத்து மாநில தேர்தல் பொறுப்புகளும் ஒப்படைக்கப்படும். இதற்கு ஏற்ப அவரும் பா.ஜ., ஆட்சி மலராத காஷ்மீர் உள்பட பல்வேறு மாநிலங்களில் எல்லாம் ஆட்சி அரியணையை பிடித்து காட்டினார்.
தமிழகத்தின் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அமித்ஷா சென்னை வருவது அரசியல் களத்தில் மாற்றம் உருவாக்கப்படுமோ என்ற எதிர்பார்ப்பு தமிழகத்தில் உருவாகி உள்ளது. சென்னையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர் கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் பணி மற்றும் கூட்டணி விவாகரம் குறித்து ஆலோசிக்கவுள்ளார்.

இவர் வருகையை டுவிட்டரில் ஆதரவாக #TNwelcomeschanakya என்றும், எதிர்ப்பாக #Goback_Mr_420 என்ற ஹேஸ்டாக்கில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அமித்ஷா வருகையே டுவிட்டரில் டிரண்ட் ஆகி உள்ளது.
தமிழக பா.ஜ., தலைவர் முருகன் அவரது டுவிட்டரில்; பாரதத்தின் நிகழ்காலமே ! தமிழகத்தின் எதிர்காலமே என கூறியுள்ளார்.
பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா அவரது டுவிட்டரில் ; மாண்புமிகு உள்துறை அமைச்சரும் அரசியல் சாணக்கியராக அறியப்படுகின்ற வெற்றி நாயகனை வருக வருக என வரவேற்கிறேன். என பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் விதிமாறும்
கர்நாடாக கலாசார துறை அமைச்சரும், தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளருமான சி.டி. ரவி தமிழில்;
எதிரிகள் அவர்தம் படை புகுந்து
நைய புடைய எம்தலைவன் வருகிறார்
தமிழ்நாட்டின் விதிமாறும் இனி காண்பீர்
எதிர்ப்போர் யாவரும் விலகுவீரே - என்றும் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE