பொது செய்தி

இந்தியா

"ஒருவர் கார் கொடுக்கிறேன் என்கிறார்,நீங்கள் தங்கம் கொடுக்கிறேன் என்கிறீர்கள். எங்கேதான் பணம் இருக்கிறதோ,"

Updated : நவ 21, 2020 | Added : நவ 21, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
போடி சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில் அதிக உறுப்பினர்களைச் சேர்க்கும் கட்சி நிர்வாகிக்கு, 1 பவுன் தங்க நாணயம் வழங்கப்படும். அதை அடுத்து சேர்ப்பவர்களுக்கு, அரை பவுன் தங்க நாணயம் வழங்கப்படும்.- தேனி வடக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் தங்கத் தமிழ்செல்வன்'ஒரு கட்சித் தலைவர், இன்னோவா கார் கொடுக்கிறேன் என்கிறார். நீங்கள், தங்கம் கொடுக்கிறேன் என்கிறீர்கள். எங்கே
"ஒருவர் கார் கொடுக்கிறேன் என்கிறார்,நீங்கள் தங்கம் கொடுக்கிறேன் என்கிறீர்கள். எங்கேதான் பணம் இருக்கிறதோ,"

போடி சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில் அதிக உறுப்பினர்களைச் சேர்க்கும் கட்சி நிர்வாகிக்கு, 1 பவுன் தங்க நாணயம் வழங்கப்படும். அதை அடுத்து சேர்ப்பவர்களுக்கு, அரை பவுன் தங்க நாணயம் வழங்கப்படும்.
- தேனி வடக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் தங்கத் தமிழ்செல்வன்


'ஒரு கட்சித் தலைவர், இன்னோவா கார் கொடுக்கிறேன் என்கிறார். நீங்கள், தங்கம் கொடுக்கிறேன் என்கிறீர்கள். எங்கே தான் பணத்தை வைத்திருக்கிறீர்களோ....' என, கேட்கத் தோன்றும் வகையில், தேனி வடக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் தங்கத் தமிழ்செல்வன் பேச்சு.



முதலாளிகள் தான், 'செல்வ உற்பத்தியாளர்கள்' என பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் குறிப்பிட்டு பேசியிருந்தார். ஆனால் உண்மையில், தொழிலாளர்கள் இல்லாமல், தொழிலும் இல்லை; செல்வ வளங்களின் உருவாக்கமும் இல்லை என்பதை கொரோனா - ஊரடங்கு காலம் கண்கூடாக காட்டிவிட்டது.
- மார்க்சிஸ்ட் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன்


'தொழிலாளர்கள் என்றிருந்தால், நாங்களும் இருப்போம் என்றும் சொல்லி விடுங்களேன்...' என, போட்டுக் கொடுக்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் அறிக்கை.



தமிழக அரசு பஸ்களின் கண்ணாடி, தரம் இல்லாமல் இருப்பதால், இரவு நேரத்தில், மழை பெய்யும் போது, சாலை தெளிவாக தெரியாமல், வாகனங்களை குறைந்த வேகத்திலேயே இயக்க வேண்டியுள்ளது. பொதுமக்கள் உயிரை பணயம் வைப்பதில், ஆள்பவர்கள் சம்பாதிப்பது எவ்வளவு?
- தி.மு.க., மகளிரணிச் செயலர் கனிமொழி


latest tamil news





'உங்கள் ஆட்சியில் மழை பெய்யவில்லையா; அப்போது, எந்த நிறுவனத்தின் கண்ணாடி வாங்கினார்களோ அங்கு தான் இப்போதும் வாங்குகின்றனர்...' என, பதிலடி கொடுக்கத் தோன்றும் வகையில், தி.மு.க., மகளிரணிச் செயலர் கனிமொழி அறிக்கை.



கடலில், தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தகுந்த தீர்வு காணப்படாவிட்டால், தமிழக காங்., மீனவர் அணியின் துணையுடன், சென்னையில், இலங்கை துாதரகம் முன், மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்.
- தமிழக காங்., தலைவர் அழகிரி


'அப்பாடா, தமிழக காங்கிரசில், மீனவர் அணி என ஒரு அணி இருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்கு வேலை கொடுக்கத் தயாராகி விட்டீர்கள் போலிருக்கிறதே...' என, கிண்டலடிக்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., தலைவர் அழகிரி அறிக்கை



அ.தி.மு.க., ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்கிறது. வேல் யாத்திரைக்கு மட்டும் அனுமதி வழங்காமல், மற்ற அனைத்து போராட்டங்களுக்கும், அ.தி.மு.க., அரசு அனுமதி வழங்குகிறது.
- பா.ஜ., மாநில பொதுச்செயலர் ராகவன்


'இதற்கெல்லாம், உங்கள் கட்சியினர் செய்யும் ரகளை தான் காரணம். தமிழகத்தில், அ.தி.மு.க., என்ற கட்சி ஆட்சியில் இருக்கிறது என்ற நினைவே இல்லாமல், 'அடுத்து வேல் ஆட்சி தான்' என்றால், தடை செய்யாமல் என்ன செய்யும்...' என, கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ., மாநில பொதுச்செயலர் ராகவன் பேட்டி.


Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
21-நவ-202020:21:42 IST Report Abuse
r.sundaram தொழிலதிபர்கள் இருந்தாதான் தொழில் தொடங்குவார்கள், அங்குதான் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டி வரும். கொஞ்சம் பொறுங்கள் இனிமேல் தொழிலாளர்களே தேவைப்பட மாட்டார்கள், ரோபோ வந்து விடும்.
Rate this:
Cancel
Raj - Namakkal,சவுதி அரேபியா
21-நவ-202015:04:03 IST Report Abuse
Raj ஒட்டுக்கு காசு கொடுப்பவர்களை தான் உங்கள் கண்ணுக்கு தெரிகிறதா? MLA வுக்கு காசி கொடுத்து வாங்குபவர்களுக்கு எங்கிருந்து பணம் வந்தது என கேட்க தைரியம் உண்டா ?
Rate this:
Cancel
LAX - Trichy,இந்தியா
21-நவ-202013:19:45 IST Report Abuse
LAX வேற எந்த டாப்பிக்கும் கிடைக்கல போல..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X