ஷாப்பிங் மாலில் துப்பாக்கியால் சுட்ட மர்மமனிதர்; அமெரிக்காவில் பரபரப்பு

Updated : நவ 21, 2020 | Added : நவ 21, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
விஸ்கான்சின்: அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் ஒரு ஷாப்பிங் மாலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 8 பேர் காயமடைந்தனர்.அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் மில்வாக்கி என்ற நகரத்தில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இதனால் மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடினர். சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த
US, Mall, GunShot, 8Injured,

விஸ்கான்சின்: அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் ஒரு ஷாப்பிங் மாலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 8 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் மில்வாக்கி என்ற நகரத்தில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இதனால் மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடினர். சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் எவருக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்று நகர மேயர் தெரிவித்துள்ளார்.


latest tamil news



துப்பாக்கிச்சூடு நடைபெற்றதும் வணிக வளாகத்தை 75க்கும் மேற்பட்ட போலீசார் சுற்றி வளைத்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் வணிக வளாகத்திற்குள் இருக்கக்கூடும் எனக்கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், துப்பாக்கிச்சூடு நடத்தியவருக்கு 20 முதல் 30 வயது இருக்கும், எனக்கூறினர். துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றிய முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
21-நவ-202020:27:47 IST Report Abuse
Ramesh Sargam அமெரிக்காவில் கொரானா வைரஸ் சீக்கிரம் போக வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்த துப்பாக்கி சூடு (gun culture) கலாச்சாரம் போகவே போகாது, யார் அதிபராகவந்தாலும். இது அமெரிக்காவிற்கு விதித்த சாபம் போலும். அந்த கடவுள்தான் அங்குள்ள சாமானியர்களை காப்பாற்றவேண்டும்.
Rate this:
Cancel
Ramki - Chennai,இந்தியா
21-நவ-202014:48:47 IST Report Abuse
Ramki தீவிரவாதம் வெள்ளிக்கிழமையுடன் மட்டுமே , சிறப்பாக , மதியத்தின் பின் வெடித்துக் கொண்டாடும்.
Rate this:
Cancel
பச்சையப்பன், கோபால் புரம். இதெல்லாம் பாழாய் போன யூதர்கள் சதியாக்கும். நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக உலகெங்கும் பயங்கரவாத செயல்கள் செய்து விட்டு வெகு எளிதாக இசுலாம் மேல் பழியை போடுவார்கள். யூதர்கள் அமெரிக்காவின் செல்லப் பிள்ளைகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X