அரசியல் செய்தி

தமிழ்நாடு

மூத்த குடிமக்களுக்கு தபால் வாக்கு: ஸ்டாலின் கண்டனம்

Updated : நவ 21, 2020 | Added : நவ 21, 2020 | கருத்துகள் (53)
Share
Advertisement
சென்னை: பீஹார் மாநில சட்டசபைத் தேர்தலின்போது பின்பற்றப்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கான தபால் வாக்குமுறையை பின்பற்றுமாறு அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும், இந்திய தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பீஹார் மாடல் கடைபிடிக்கப்பட வேண்டும் என
BiharModel, MKStalin, DMK, PostalDrive, தபால்ஓட்டு, பீஹார் மாடல், தேர்தல் ஆணையம், திமுக, தலைவர், ஸ்டாலின், கண்டனம்

சென்னை: பீஹார் மாநில சட்டசபைத் தேர்தலின்போது பின்பற்றப்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கான தபால் வாக்குமுறையை பின்பற்றுமாறு அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும், இந்திய தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பீஹார் மாடல் கடைபிடிக்கப்பட வேண்டும் என அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி பேரதிர்ச்சி அளித்திருக்கிறது.


latest tamil news


பீஹார் தேர்தலில் 80 வயதுக்கு அதிகமான மூத்த குடிமக்களும் மாற்றுத்திறனாளிகளும் வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்கள் என்ற புதிய வகையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தபால் வாக்களிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பூத் லெவல் அதிகாரி வீட்டுக்கு சென்று தபால் வாக்கு சீட்டை கொடுப்பார், வாக்குகள் பெற்ற வாக்குச்சீட்டை திரும்ப வாங்கி வந்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைப்பார். இதுதான் அந்த மாடல். வாக்காளரின் வயது உரிய முறையில் சரிபார்க்கப்படுவதில்லை. மாற்றுத்திறனாளி என்று வகைப்படுத்தலுக்கும் எந்த விதிமுறையும் வகுக்கப்படவில்லை.


latest tamil news


தபால் வாக்களிப்பு முறைக்கு தகுதி படைத்தவர்கள் என்ற பட்டியலும் முன்கூட்டியே அறிவிக்கப்படாமல் இப்படி ஒரு குளறுபடி தான் நாடு முழுவதிலும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. நேரடியாக தபால் வாக்குச்சீட்டுகளை கொண்டு போய் கொடுத்து வாக்குகள் பதிந்து பெறுவது என்பது ரகசியமான சுதந்திரமான வாக்கெடுப்பு முறையையும், ஜனநாயகத்தையும் கேலிக்கூத்தாக்கி விடும். ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்கும் இடையே ஒரு சமமான நேர்மையான தேர்தல் களத்தை உருவாக்காது. அனைத்து கட்சிகளுடன் ஆலோசிக்கப்படாத இந்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் திரும்ப பெறவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan_subramanian manian - Manama,பஹ்ரைன்
21-நவ-202021:11:05 IST Report Abuse
rajan_subramanian manian நீங்க எங்கேயோ போய்டீங்க. எதைத்தான் எதிர்பது என்று விவஸ்தையே இல்லை.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
21-நவ-202020:45:05 IST Report Abuse
S. Narayanan padipparivillatha stalin paavam ithu avarukku kadaisi therdhal pola
Rate this:
Cancel
dina - chennai,இந்தியா
21-நவ-202020:42:04 IST Report Abuse
dina முத்த குடிமக்கள் தி மு காவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற பயமா.அல்ல பயம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X