கொரோனா உலக நிலவரம்

Updated : ஜன 23, 2021 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (260) | |
Advertisement
இன்று ( ஜன.,-23 ம் தேதி ) காலை: 07: 45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 9 கோடியே 87 லட்சத்து 48 ஆயிரத்து 219 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 லட்சத்து 16 ஆயிரத்து 434 பேர் பலியாகினர். 7 கோடியே 9 லட்சத்து 20 ஆயிரத்து 114 பேர் மீண்டனர்.கொரோனா பாதிப்பில் இந்தியா தற்போது 2 வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா என பட்டியலில் டாப்பில் உள்ளது.முதலிடத்தில் அமெரிக்காஉலகிலேயே

இன்று ( ஜன.,-23 ம் தேதி ) காலை: 07: 45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 9 கோடியே 87 லட்சத்து 48 ஆயிரத்து 219 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 லட்சத்து 16 ஆயிரத்து 434 பேர் பலியாகினர். 7 கோடியே 9 லட்சத்து 20 ஆயிரத்து 114 பேர் மீண்டனர்.
கொரோனா பாதிப்பில் இந்தியா தற்போது 2 வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா என பட்டியலில் டாப்பில் உள்ளது.


முதலிடத்தில் அமெரிக்காஉலகிலேயே அதிக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கு இதுவரை 2 கோடியே 53 லட்சத்து 90 ஆயிரத்து 042 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 24 ஆயிரத்து 177 பேர் பலியாகி உள்ளனர். 1 கோடியே 52 லட்சத்து 22 லட்சத்து 719 பேர் மீண்டுள்ளனர். இன்னும் பலர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்தியாவில் 1 கோடியே 6 லட்சத்து 40 ஆயிரத்து 544 பேர் பாதிக்கப்பட்டு, 1 கோடியே 3 லட்சத்து 838 பேர் மீண்டுள்ளனர். 1 லட்சத்து 53 ஆயிரத்து 221 பேர் பலியாகினர்.
பிரேசிலில் 87 லட்சத்து 55 ஆயிரத்து 133 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 2,15,299 பேர் பலியாகினர்.
ரஷ்யாவில் 36 லட்சத்து 77 ஆயிரத்து 352 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 68,412 பேர் பலியாகினர்.
பிரிட்டனில் 35 லட்சத்து 83 ஆயிரத்து 907 பேர் பாதிக்கப்பட்டனர். 95,981 பேர் பலியாகினர்.
பிரான்சில் 30 லட்சத்து 11 ஆயிரத்து 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 72,647 பேர் இறந்துள்ளனர்.
துருக்கியில் 24 லட்சத்து 18 ஆயிரத்து 472 பேர் பாதிக்கப்பட்டு, 24,789 பேர் பலியாகினர்.
இத்தாலியில் 24 லட்சத்து 41 ஆயிரத்து 854 பேர் பாதிக்கப்பட்டு 84,674 பேர் பலியாகினர்.
ஸ்பெயின் நாட்டில் 26 லட்சத்து 3 ஆயிரத்து 472 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 55 ஆயிரத்து 441 பேர் இறந்துள்ளனர்.
ஜெர்மனியில் 21 லட்சத்து 25 ஆயிரத்து 261 பேர் பாதிக்கப்பட்டு 52,020 பேர் பலியாகினர்.

கொலம்பியாவில் 19 லட்சத்து 87 ஆயிரத்து 418 பேர் பாதிக்கப்பட்டு 50,586 பேர் பலியாகினர்.
அர்ஜென்டினாவில் 18 லட்சத்து 53 ஆயிரத்து 830 பேர் பாதிக்கப்பட்டு 46,575 பேர் பலியாகினர்.

மெக்சிகோவில் 17 லட்சத்து 32 ஆயிரத்து 290 பேர் பாதிக்கப்பட்டு, 1,47,614 பேர் பலியாகினர்.
ஈரானில் 13 லட்சத்து 60 ஆயிரத்து 852 பாதிக்கப்பட்டு, 57,225 பேர் பலியாகினர்.
தென் ஆப்ரிக்காவில் 13 லட்சத்து 92 ஆயிரத்து 568 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 40,076 பேர் இறந்துள்ளனர்.
பெருவில் 10 லட்சத்து 88 ஆயிரத்து 096 பேர் பாதிக்கப்பட்டு 39,427 பேர் பலியாகினர்.
கனடாவில் 7 லட்சத்து 37 ஆயிரத்து 407 பேர் பாதிக்கப்பட்டு 18,828 பேர் இறந்துள்ளனர்.
சிலியில் 6 லட்சத்து 90 ஆயிரத்து 066 பேர் பாதிக்கப்பட்டு 17,786 பேர் பலியாகினர்.
வங்கதேசத்தில் 5 லட்சத்து 30 ஆயிரத்து 890 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,981 பேர் இறந்துள்ளனர்.
பாகிஸ்தானில் 5 லட்சத்து 30 ஆயிரத்து 818 பேர் பாதிக்கப்பட்டு 11,247 பேர் உயிரிழந்துள்ளனர்.

சவுதி அரேபியா 3 லட்சத்து 65 ஆயிரத்து 988 பேர் பாதிக்கப்பட்டு 6,346 பேர் பலியாகி உள்ளனர்.

ஜப்பானில் 3 லட்சத்து 51 ஆயிரத்து 020 பாதிக்கப்பட்டு 4,830 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் 88 ஆயிரத்து 911 பேர் பாதிக்கப்பட்டு, 4,635 பேர் பலியாகினர்.

ஆப்கனில் 54,559 பேர் பாதிக்கப்பட்டு 2,373 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரதமர் மோடி ஏப்.14ல் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் வரும் மே.3 ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என தெரிவித்தார். இந்நிலையில் ( மே.1 ம் தேதி ) மத்திய அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் 14 நாட்களுக்கு மே. 17 வரை ஊரடங்கு நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மீண்டும் ஜூன் 1 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக புதிய தளர்வுகளுடன் ஐந்தாம் கட்டமாக பொது ஊரடங்கை ஜூன் 30 வரை நீட்டித்து மத்திய மே.30ல் அறிவிப்பு வெளியிட்டது. 5-ம் கட்டமாக மத்திய அரசு அன்லாக் 1. 0 என்ற பெயரில் சில புதிய அறிவிப்புகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. வெளியிடப்பட்ட தளர்வுகள் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும்:


முதல்கட்ட தளர்வுகள்:* ஜூன் 8 முதல் ஹோட்டல்கள், ஷாப்பிங்மால்கள் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி.


இரண்டாம் கட்ட தளர்வுகள்* இரண்டாம் கட்ட தளர்வுகளில் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் திறப்பு குறித்து மாநில அரசுகளின் ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும்.


மூன்றாம் கட்ட தளர்வுகள்* மூன்றாம் கட்ட தளர்வில் சினிமா, பொழுதுபோக்கு பூங்கா, உடற்பயிற்சி கூடங்கள், மெட்ரோ ரயில்கள், நீச்சல் குளங்கள் ஆகியன திறப்பு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நான்காம் கட்ட தளர்வுகள்நான்காம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. இதில் செப்டம்பர் 7 முதல் நாடு முழுவதும் உள்ள மெட்ரோ ரயில் சேவையை தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்.21 முதல் திறந்தவெளி திரையரங்கத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் பொழுது போக்கு, விளையாட்டு அரங்கம், அரசியல் நிகழ்ச்சிகளில் பங்குபெற 100 பேர் வரை அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி கட்டுப்பாட்டு பகுதிகளில் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக ஊரடங்கு நீட்டிப்புகொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, பல்வேறு தளர்வுகளுடனும் செப்.,30 வரை, நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இ-பாஸ் முறை ரத்து செய்யப்படுவதாகவும், மாவட்டங்களுக்குள் பஸ்கள் இயங்கவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.செப்.7 முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும்.
வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதித்துள்ளதுடன், ஞாயிற்றுகிழமைகளில் அமல்படுத்தப்படும் தளர்வில்லா ஊரடங்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை : கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, பல்வேறு தளர்வுகளுடன் ஆக.,31 வரை நீட்டிக்கப்பட்டது. கடந்த 29 ம் தேதி கலெக்டர்களுடனும், மருத்துவ மற்றும் சுகாதார நிபுணர்களுடனும் நடத்தப்பட்ட ஆலோசனை அடிப்படையிலும், அமைச்சர்களுடன் நடந்த ஆலோசனையின் பேரிலும், தற்போதுள்ள ஊரடங்கு, பல்வேறு தளர்வுகளுடன் 30.9.2020 வரை நீட்டிக்கப்படுகிறது.

எனினும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தளர்வுகளுடன், செப்.,1 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.


தமிழகத்தில் 5வது கட்ட தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்புதமிழகத்தில் தளர்வுகளுடன் அக். 31 வரை ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:

* தமிழகத்தில் தளர்வுகளுடன் அக்டோபர் 31-ம் தேதி வரை ஊரடங்கை நள்ளிரவு 12 மணி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

* சென்னை விமான நிலையத்திற்கு தினமும் 100 உள் நாட்டு விமானங்கள் வந்து செல்ல அனுமதி.

* பள்ளி, கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட தடை நீட்டிப்பு.

* அனைத்து கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டிற்கான தடை தொடரும்

* டீக்கடை, உணவகங்கள், காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி.

* உணவகங்களில் இரவு 10 மணி வரை பார்சல் வாங்குவதற்கு அனுமதி.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


5-ம் கட்ட தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு* ஐந்தாம் கட்ட தளர்வில் வரும் அக். 15-ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள், மல்டிப்ளக்ஸ் அரங்குகள் திறக்க அனுமதி .

* அக். 15-க்கு பின் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு எடுத்துக்கொள்ளலாம்.மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்களின் ஒப்புதல் பெறவேண்டும்

* நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்களும் திறக்க அனுமதி அளிக்கப்படும்.

* கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அக். 31 வரை ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கும்.

* மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்திற்கு கட்டுப்பாடு விதிக்க கூடாது. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்து உள்ளது.


பண்டிகை காலத்தில் கவனம் தேவை

கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின், 'டிவி' சேனல்கள் வழியாக, பிரதமர் மோடி, ஆறு முறை நாட்டு மக்களுக்கு உரையாற்றி உள்ளார். ஏழாவது முறையாக, நேற்று மாலை, நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பேசியதாவது: கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை, முழு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து ஆராய்ச்சியில், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.கொரோனா தடுப்பூசி, அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வோம். தடுப்பூசி வினியோகத்திற்கான திட்டங்கள் தயாராக உள்ளன. நோய், நெருப்பு போன்றவற்றை, சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அடுத்த சில மாதங்களை கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டும். கொரோனாவை முழுமையாக வீழ்த்தும் வரை, நம் போராட்டம் நிறைவு பெறாது. நவராத்திரி, பக்ரீத், தீபாவளி, குருநானக் ஜெயந்தி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகள் வருகின்றன. குளிர்காலமும் துவங்க உள்ளது. அதனால், கொரோனா விழிப்புணர்வுடன் பண்டிகைகளை கொண்டாட வேண்டும். தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்து, முக கவசம் அணிந்து, பண்டிகைகளை கொண்டாட வேண்டும். நீங்களும், உங்கள் குடும்பத்தினரும், மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என, இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். இந்த பண்டிகை காலம், உங்கள் வீடுகளில் மகிழ்ச்சியை ஏற்படுத்தட்டும். இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார்.6வது கட்ட தளர்வுகளுடன் நவ. 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு


தமிழக அரசு இன்று மேலும் சில தளர்வுகளுடன் நவ. 30 வரை ஊரடங்கை நீட்டித்து பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு

* நவ. 16-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை பள்ளிகள் திறக்க அனுமதி.
* நவ.10-ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் வணிக வளாகங்கள், மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் மற்றும் தியேட்டர்கள் திறக்க அனுமதி.
* மதம் சார்ந்த கூட்டங்கள், கலாச்சார ,பொழுது போக்கு நிகழ்ச்சிகள், திருமணம், துக்க நிகழ்ச்சிகளில் 100 பேர் வரை பங்கேற்லாம்.
* நவ. 16 முதல் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்விநிறுவன விடுதிகள் அனைத்தும் திறக்க அனுமதி.
* புற நகர் மின்சார ரயில் போக்குவரத்து சேவைகள் மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி செயல்பட அனுமதி.
* சின்னத்திரை மற்றும் திரைப்பட படிப்பிடிப்புகளில் 150 பேர் வரை பங்கேலாம்.
* பொழுது போக்கு பூங்காங்களும் திறக்க அனுமதி.
*கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு இ. பதிவு முறை தொடர்ந்து அமல்.
*சென்னை கோயம்பேட்டில் நவ. 2, 3 தேதிகளில் வியாபாரம் செயல்பட அனுமதி.
பண்டிகை காலங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்த்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


7வது கட்ட தளர்வுகளுடன் டிச. 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு


தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு டிச.31 வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;
* டிச.31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடரும்.
*டிச.7 முதல் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் துவங்கும்.
*டிச.7 முதல் மருத்துவம், மருத்துவம் சார்ந்த கல்லூரி இள நிலை மாணவர்களுக்கு திறக்கப்படும்.
*டிச.14 முதல் மெரினா கடற்கரை திறக்கப்படும்.
*நீச்சல் குளத்தில் பயிற்சிக்காக திறக்கலாம்.
* சுற்றுலா தலங்களில் வழிகாட்டுமுறைகளுடன் அனுமதி
*டிச.1 முதல் மத, அரசியல், பொழுதுபோக்கு கூட்டங்களுக்கு அனுமதி. உள் அரங்க கூட்டத்தில் 200 பேர் வரை பங்கேற்கலாம். முறையான காவல்துறை அனுமதி பெற வேண்டும்.
*வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு இப்பதிவு முறை தொடர்ந்து அமலில் இருக்கும்.
*நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகள் இல்லை.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.8வது கட்ட தளர்வுகளுடன் ஜன., 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு


2021 ஆம் ஆண்டு ஜனவரி 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளதாவது: வரும் 2021 ம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 8.0 நடைமுறைபடுத்தப்பட உள்ளது.பிரிட்டனில் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ், சர்வதேச சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதத்திற்கான ஊரடங்கு தளர்வு 7.0-வில் நடைமுறையில் இருந்த மெட்ரோ ரெயில் சேவை, கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி, திரையரங்குகள் செயல்பட அனுமதி, பள்ளிகள் திறப்பு, உணவகங்கள் செயல்பட அனுமதி உள்பட அனைத்தும் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


8வது கட்ட தளர்வுகளுடன் ஜன., 31 வரை ஊரடங்கு நீட்டிப்புதமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜன., வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தளர்வுகள்
* உள் அரங்கங்களில் மட்டும் 50 சதவீத இருக்கைகள் அல்லது அதிகபட்சம் 200 பேர் பங்கேற்கும் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார, கல்வி மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி.* திரைப்படம் மற்றும் சின்னத்திரை உட்பட திரைப்பட தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு, பணி செய்யும் நபர்களின் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பின்றி பணி செய்ய அனுமதி.* நேரக் கட்டுப்பாடுகளை தளர்த்தி, அனைத்து வழிபாட்டு தலங்களிலும், வழக்கமான நேர நடைமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி.

கட்டுப்பாடுகள்
* புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை தவிர தமிழகம் வருபவர்களுக்கு இ-பதிவு முறை தொடரும்.* மத்திய அரசு அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை தொடரும்.* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.* காணும் பொங்கல் அன்று மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Advertisement
வாசகர் கருத்து (260)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-ஜன-202122:41:52 IST Report Abuse
Rama Krishnan Rama Krishnan
Rate this:
Cancel
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
13-ஜன-202110:51:38 IST Report Abuse
வந்தியதேவன் ஏண்டா... இப்பக்கூட திருந்தமாட்டீங்களா...?
Rate this:
Cancel
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
12-ஜன-202120:58:17 IST Report Abuse
வந்தியதேவன் ஏண்டா... இப்பக்கூட திருந்தமாட்டீங்களா...? - உலகத்தின் ஆயுளில்... இயற்கையின் வாழ்நாளில்... நீர்க்குமிழி வாழ்க்கை வாழ்ந்து மறைந்துபோகும் மானிட மிருகங்களே... ஏன்டா...இப்பக்கூட திருந்தமாட்டீங்களா...? மிருகமாய் வெறியுடன் அலைந்து திரிந்த உங்களை... பரிணாம வளர்ச்சி காண வைத்து... பகுத்தறிவு தந்து... பண்பட்ட மனிதனாய் வாழ வழி வகுத்து தந்த... இயற்கையையே இம்சிக்கும் இரண்டாம் புலிகேசியாகிய நீங்கள்... இப்பக்கூட திருந்தமாட்டீங்களா...? அஞ்ஞானத்தை அழித்து விஞ்ஞானம் எனும் ஞானம் தந்து அமைதியாய் வாழ வழி காட்டிய... இயற்கையின் அடி மடியிலேயே கை வைத்து... அழிக்க நினைக்கும் மனித மிருகங்களே.. இயற்கை... கொரோனா படையெடுப்பு நடத்திய பின்பும்... இயற்கையோடு இணைந்து வாழ... இயற்கையை பணிந்து வாழ... ஓர் வாய்ப்பு அளித்தும்... அவ்வாய்ப்பினை உதாசீனப்படுத்தி.. எரியும் கொள்ளிக்கட்டையை உன் தலையிலேயே தேய்த்து கொள்ளும் மனித மிருகங்களே... ஏன்டா... இப்பக்கூட திருந்தமாட்டீங்களா...? இன்னும்கூட திருந்தலையா...? இப்போது இல்லையென்றால்... இனி எப்போது திருந்த போகிறீர்கள்...? திருந்தி... இயற்கையோடு இணைந்திடுங்கள்... இயற்கையை பணிந்திடுங்கள்... இல்லையேல்... இயற்கை - உங்கள் கல்லறைமீது மலர் வளையம் வைத்துமரியாதை செலுத்திவிடும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X