பொது செய்தி

தமிழ்நாடு

போங்க அமித்ஷா... வாங்க அமித்ஷா... : டிரெண்டிங்கில் டிஷ்யும் டிஷ்யும்!

Updated : நவ 22, 2020 | Added : நவ 21, 2020 | கருத்துகள் (45)
Share
Advertisement
சென்னை : தமிழகம் வரும் அமித்ஷாவை எதிர்த்தும், ஆதரித்தும் சமூகவலைதளங்களில் காரசாரமான சண்டை நடப்பதால் அவரை வைத்து டிரெண்ட் ஆகிறது.தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இது தொடர்பான கூட்டணி பேச்சுக்கும், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பாதைக்கான அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட நலத்திட்ட பணிகளுக்காக இன்று(நவ., 21) சென்னை வருகிறார் மத்திய உள்துறை
GoBackAmitShah, TNWelcomesAmitShah, Tamilnadu, AmitShah, அமித்ஷா, தமிழ்நாடு,

சென்னை : தமிழகம் வரும் அமித்ஷாவை எதிர்த்தும், ஆதரித்தும் சமூகவலைதளங்களில் காரசாரமான சண்டை நடப்பதால் அவரை வைத்து டிரெண்ட் ஆகிறது.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இது தொடர்பான கூட்டணி பேச்சுக்கும், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பாதைக்கான அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட நலத்திட்ட பணிகளுக்காக இன்று(நவ., 21) சென்னை வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. மாநிலங்களில் பா.ஜ., வெற்றிக்கு வியூகங்கள் வகுத்து செயல்படுத்துவதில் வல்லவரான இவரை சாணக்கியன் என்று ஒரு சாரர் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் அவரின் வருகை முக்கியமாக பார்க்கப்படுகிறது.

அமித்ஷா வருகையை எதிர்த்து GoBackModi போன்று GoBackAmitShah என்ற ஹேஷ்டாக்கை இங்குள்ள கட்சியினரின் ஐ.டி., அணியினர் மற்றும் பொதுவாக உள்ளவர்களும் டிரெண்ட் செய்கின்றனர். இதற்கு போட்டியாக பா.ஜ., ஆதரவாளர்கள் TNWelcomesAmitShah என்ற ஹேஷ்டாக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.latest tamil news
''தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகம். இங்கு பா.ஜ.வின் ஜம்பா பலிக்காது. அமித்ஷாவின் சாணக்கிய தனமும் எடுபடாது'' என ஒரு சிலர் கருத்து பதிவிட்டு நிறைய நக்கலான மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கு பதிலடியாக ''பிரதமரின் நம்பிக்கைக்குரிய, நவீன இந்தியாவின் இரும்புமனிதர், தமிழ்நாட்டு அரசியலை மாற்றியமைக்க வருகை தரும் அமித்ஷாவை வரவேற்கிறோம்'' என ஒரு சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

அமித்ஷாவின் வருகையை வைத்து ''#GoBackAmitShah, #TNWelcomesAmitShah, #Tamilnadu, #TNwelcomeschanakya'' உள்ளிட்ட ஹேஷ்டாக்குகள் இந்திய அளவில் டுவிட்டரில் டிரண்ட் ஆகி வருகின்றன.

Advertisement
வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ANTONYRAJ - MADURAI,இந்தியா
22-நவ-202008:54:21 IST Report Abuse
ANTONYRAJ திமுகதான் தைரியமான ஆளாச்சே கருப்பு பலூன பறக்க விட்றதானேஇதிலிருந்து அவரை பார்த்து திமுகவினர் பயந்து நடுங்குவது நன்றாக தெரிகிறது.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
22-நவ-202007:58:07 IST Report Abuse
VENKATASUBRAMANIAN திமுகவிற்கு பயம் வந்துவிட்டது. நேற்று அமித்ஷா பேசியதற்கு எந்தவித reaction இல்லை
Rate this:
Cancel
ramani - dharmaapuri,இந்தியா
22-நவ-202005:35:28 IST Report Abuse
ramani People of Tamil Nadu welcomes Amit Shah always. People of Tamil Nadu don't want Dmk and co. People of Tamil Nadu don't want Anti Nationals and Anti Hindu parties.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X