பாக்., அத்துமீறல்: இந்திய வீரர் வீரமரணம்

Updated : நவ 21, 2020 | Added : நவ 21, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
ஜம்மு:காஷ்மீரில், ரஜோரி மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில், பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.இன்று அதிகாலை 1 மணி முதல், நவ்ஷேரா செக்டாரில், பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில், ஹவில்தார் பாட்டீல் சங்ராம் சிவராஜ் என்ற வீரர் படுகாயமடைந்தார். தொடர்ந்து, அவர் சிகிச்சை பலனின்றி வீரமரணம்
Army, jawan, killed, ceasefire, violation,  India, pakistan, Loc, armyjawan, இந்தியா, பாகிஸ்தான், அத்துமீறல், வீரமரணம், வீரர்,

ஜம்மு:காஷ்மீரில், ரஜோரி மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில், பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.

இன்று அதிகாலை 1 மணி முதல், நவ்ஷேரா செக்டாரில், பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில், ஹவில்தார் பாட்டீல் சங்ராம் சிவராஜ் என்ற வீரர் படுகாயமடைந்தார். தொடர்ந்து, அவர் சிகிச்சை பலனின்றி வீரமரணம் அடைந்தார். பாக்., அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் உடனடியாக கடுமையான பதிலடி கொடுத்தது. இரு தரப்பிற்கு இடையிலான மோதல் நீண்ட நேரம் நீடித்தது.


latest tamil news




கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் அத்துமீறலில் பொதுமக்கள் 4 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். 5 ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் கடுமையான தாக்குதலில் 8 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் முகாம்கள், பதுங்கு குழிகள், ஆகியவை அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
21-நவ-202021:08:28 IST Report Abuse
Ramesh Sargam வீர மரணம் அடைந்த இந்திய வீரரின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். இனிமேலும் இந்தியா இதுபோன்ற பாகிஸ்தானின் அத்துமீறல்களை தடுக்காமல் இருந்தால் அது சரியல்ல. அவர்களுக்கு தகுந்த பாடம் கட்பிற்கவேண்டும். வெறுமனே பேப்பரில் எழுதி அதை படித்து எச்சரிக்கைவிடும் வழக்கத்தை மாற்றி, surgical strike போன்ற நடவடிக்கையால் அந்த கோழைகளுக்கு தகுந்த பாடம் கட்பிக்கவேண்டும்.
Rate this:
Cancel
Elango - Kovai,இந்தியா
21-நவ-202017:52:10 IST Report Abuse
Elango இஸ்ரேல் பானி தான் சரி...
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
21-நவ-202015:26:25 IST Report Abuse
Rasheel காட்டுமிராண்டிகளுக்கு அவன் மொழியில் பதில் சொன்னால் தான் தெரியும். ஐரோப்பாவை இவங்களை உள்ளே விட்டு விட்டு பிரச்சனைகளில் சிக்கி கொண்டு உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X