பொது செய்தி

தமிழ்நாடு

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் அதீத கனமழைக்கு வாய்ப்பு

Updated : நவ 21, 2020 | Added : நவ 21, 2020
Share
Advertisement
சென்னை: சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் உருவாகும் என கணிக்கப்பட்ட நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி முன்கூட்டியே உருவானது. இந்த புயல் மேற்கு வடமேற்கு திசையில், இலங்கையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழகத்தில் நாளை மறுநாள்(நவ.,23) முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் அதீத கனமழை பெய்ய
வங்கக்கடல், கனமழை, சென்னை வானிலை

சென்னை: சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் உருவாகும் என கணிக்கப்பட்ட நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி முன்கூட்டியே உருவானது. இந்த புயல் மேற்கு வடமேற்கு திசையில், இலங்கையை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக, தமிழகத்தில் நாளை மறுநாள்(நவ.,23) முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, தூத்துக்குடி, காரைக்காலில் அதீத கனமழை பெய்யக்கூடும்இன்று முதல் வரும் 25 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


இதனிடையே, தமிழக பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இந்திய வானிலை அறிக்கைப்படி, வரும் 25ம் தேதி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரத்தில் ஒரு சில இடங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.24ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.23ம் தேதி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும்.திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், மயிலாடுதுறை, மாவட்டங்களில் வரும் 25ல் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X