வாஷிங்டன்: அனைத்து அமெரிக்கர்களுக்கும் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி இலவசம் என அந்நாட்டுத் துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார்.
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1.22 கோடி பேர் பாதிக்கப்பட்டு 73.16 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்; 2.60 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவல் அதிகரிப்புக்கு முன்னாள் அதிபர் டிரம்ப் தான் காரணம் என தற்போது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு டிரம்ப் ஒத்துழைக்காமல் இருந்தால் அமெரிக்கா இன்னும் பல உயிர் இழப்புகளை சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கொரோனாவை கட்டுப்படுத்த ஜோ பைடன் குழு ஒன்றை அமைத்துள்ளார். இதன் சார்பாக கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இணைந்து பைடன் - ஹாரிஸ் என்னும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அனைத்து அமெரிக்கருக்கும் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி இலவசமாக அளிக்கப்படும் என கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்புக்கு அமெரிக்க மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE