அமெரிக்காவின் வயதான அதிபர் என்னும் சிறப்பை பெறும் ஜோ பைடன்

Updated : நவ 21, 2020 | Added : நவ 21, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன், அந்நாட்டின் அதிக வயதுள்ள அதிபர் என்னும் சிறப்பை பெற்றுள்ளார்.1942ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி பிறந்தவர் ஜோ பைடன். இன்னும் இரு மாதங்களில் அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள பைடன்தான், அமெரிக்க வரலாற்றிலேயே வயதில் மிகவும் மூத்த அதிபர் என்னும் சிறப்பை பெறுகிறார். 78 வயதாகியுள்ள பைடன், நேற்று (நவ.,20) தனது பிறந்தநாளில் கூட, வழக்கமான
JoeBiden, Turns78, OldestPresident, US, ஜோ பைடன், 78வயது, அதிபர்,

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன், அந்நாட்டின் அதிக வயதுள்ள அதிபர் என்னும் சிறப்பை பெற்றுள்ளார்.

1942ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி பிறந்தவர் ஜோ பைடன். இன்னும் இரு மாதங்களில் அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள பைடன்தான், அமெரிக்க வரலாற்றிலேயே வயதில் மிகவும் மூத்த அதிபர் என்னும் சிறப்பை பெறுகிறார். 78 வயதாகியுள்ள பைடன், நேற்று (நவ.,20) தனது பிறந்தநாளில் கூட, வழக்கமான பணிகளை மேற்கொண்டு, அடுத்து அரசுப் பொறுப்பேற்பது பற்றி ஜனநாயகக் கட்சியின் உயர் தலைவர்களான நான்சி பெலோசி, சக் ஸ்கமர் ஆகியோருடன் விவாதித்தார்.


latest tamil news


அமெரிக்க வரலாற்றிலேயே இதற்கு முன்னர், மிகவும் வயதான அதிபராக ரொனால்ட் ரேகன் இருந்தார். பதவிக்காலம் முடிந்து, வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறும் போது அவரது வயது, 77 ஆண்டுகள், 349 நாள்கள் ஆகும். இதன்மூலம் 78 வயதை கடந்த பைடன், அந்நாட்டின் அதிக வயதுள்ள அதிபர் என்னும் சிறப்பை பெற்றுள்ளார். பதவிக்காலம் முடிந்து வெளியேற உள்ள டிரம்ப், பைடனை விட 4 வயது சிறியவர் ஆவார். துணை அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள கமலா ஹாரிஸ், பைடனைவிட ஏறத்தாழ 20 வயது இளையவர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
22-நவ-202006:15:47 IST Report Abuse
 Muruga Vel மலேஷியாவில் 92 வயதில் மொகாதிர் பிரதமராக பதவி ஏற்றார் ...
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
21-நவ-202020:33:11 IST Report Abuse
S. Narayanan vayadhu mudhirchi nalla arivaiththarum
Rate this:
Cancel
Raj - nellai,பஹ்ரைன்
21-நவ-202016:13:41 IST Report Abuse
Raj ஆனாலும் நல்ல ஓடுறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X