அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்வி கட்டணத்தை அரசு செலுத்தும்: முதல்வர்

Updated : நவ 21, 2020 | Added : நவ 21, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
சென்னை: 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ள மருத்துவ மாணவர்களின் கல்விக்கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மாணவர்களுக்கு உதவுவதாக திமுக அறிவித்தது அரசியல் நாடகம் எனவும் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை
அரசு பள்ளி, மாணவர்கள், மருத்துவகல்வி, முதல்வர்பழனிசாமி, பழனிசாமி, இபிஎஸ், முதல்வர்இபிஎஸ்,

சென்னை: 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ள மருத்துவ மாணவர்களின் கல்விக்கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மாணவர்களுக்கு உதவுவதாக திமுக அறிவித்தது அரசியல் நாடகம் எனவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை தமிழக அரசு இயற்றியது. அதன்படி, இந்தாண்டே, மொத்தம் 313 எம்.பி.பி.எஸ்., இடங்களிலும், 92 பல் மருத்துவ இடங்களிலும் அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கு கவுன்சிலிங் நடந்தது. அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப்பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், வனத்துறை பள்ளி மாணவர்களின் ஏழ்மை நிலை மற்றும் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு கல்வி மற்றும் இதர செலவினங்களை வழங்குவதற்காக கல்வி உதவித்தொகை மற்றும் இதர கல்வி உதவித்தொகை திட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என 18 ம் தேதி நடந்த 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான சேர்க்கை உத்தரவு வழங்கும் விழாவில் அறிவித்தேன்.


latest tamil news


இந்த உத்தரவை செயல்படுத்தும்விதமாக மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் சேர உத்தரவு கிடைத்துள்ள அனைத்து அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை உதவித்தொகை அனுமதி வரும் வரை காத்திருக்காமல், உடனடியாக செலுத்தும் விதம், தமிழக மருத்துவ சேவை கழகத்தில் ஒரு சுழல் நிதியை உருவாக்க உத்தரவிட்டுள்ளேன். அந்நிதியில் இருந்து மாணவர்களின் கல்வி, விடுதி கட்டணங்கள் போன்றவற்றை அ.தி.மு.க.,அரசே நேரடியாக கல்லூரி நிர்வாகத்திற்கு செலுத்தும். அரசு பள்ளி மாணவர்களுக்கு, அரசின் உதவி முழுமையாக கிடைக்கும் என தெரிந்த பின்பும், தி.மு.க., உதவுவதாக அறிவித்திருப்பது ஒரு அரசியல் நாடகம். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
siriyaar - avinashi,இந்தியா
22-நவ-202006:32:30 IST Report Abuse
siriyaar நீட் தேர்வுக்கு முன் 100 அரசு பள்ளி மாணவர்கள் கூட மருத்து இடம் வாங்கவில்லை, இப்ப 400 பேருக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. திமுக மருத்துவ ஊழல் ஆண்டுக்கு 5000 கோடி நின்று போச்சு
Rate this:
Cancel
dina - chennai,இந்தியா
21-நவ-202021:06:46 IST Report Abuse
dina மாணவர்கள் இந்த சுடலையின் உதவி தொகையை ஏற்றுக்கொண்டால், அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவரானது திமுக போட்ட பிட்சை - ஆர்.எஸ்.பாரதி என்று கூறியிருப்பார்.
Rate this:
Cancel
Rajan - Chennai,ஐக்கிய அரபு நாடுகள்
21-நவ-202020:43:26 IST Report Abuse
Rajan சூசைய MBBS என்னன்னு கேட்டதுக்கு அது கமல் நடிச்ச படம்னு சொல்றானேப்பா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X