சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு...

Updated : நவ 21, 2020 | Added : நவ 21, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
மணி ஐந்திருக்கும் அதுவரை இருந்த வானத்தின் நீல வண்ணம் திடீரென பச்சை நிறத்திற்கு மாறிவிட்டதோ என எண்ணும்படி ஆயிரக்கணக்கான பச்சைக்கிளிகள் கூட்டம் சென்னை சுதர்சன்ஷா வீட்டின் மாடிக்கு திரள்கிறது. சுதர்ஷன்ஷா வீடு சென்னை சிந்தாதரிப்பேட்டை ஐயா முதலி தெருவின் கடைசியில் கூவத்தை ஒட்டியுள்ளது.மொட்டை மாடியில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள ஊறவைத்த அரிசி மற்றும்
latest tamil news


மணி ஐந்திருக்கும் அதுவரை இருந்த வானத்தின் நீல வண்ணம் திடீரென பச்சை நிறத்திற்கு மாறிவிட்டதோ என எண்ணும்படி ஆயிரக்கணக்கான பச்சைக்கிளிகள் கூட்டம் சென்னை சுதர்சன்ஷா வீட்டின் மாடிக்கு திரள்கிறது.latest tamil news


சுதர்ஷன்ஷா வீடு சென்னை சிந்தாதரிப்பேட்டை ஐயா முதலி தெருவின் கடைசியில் கூவத்தை ஒட்டியுள்ளது.மொட்டை மாடியில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள ஊறவைத்த அரிசி மற்றும் நிலக்கடலையை கூட்டம் கூட்டமாய் வந்து ஆசையோடு சாப்பிடுகிறது.latest tamil news


சாப்பிட்ட பின் சந்தோஷமாய் ஆடுவதற்கு மாடியில் பல இடங்களில் கயிறுகளை தொங்கவிட்டுள்ளார் அதில் விதவிதமாய் ஆடி கிளிகள் களிப்படைகின்றன.

சுமார் இரண்டு மணி நேரம் கிளிகள் உறவும் நட்புமாக வந்து கீச் கீச் என்று சந்தோஷமாய் சப்தம் எழுப்பியபடி மாடியில் வைத்த உணவை காலி செய்கிறது இதை ஒரு தவம் போல பார்த்துக் கொண்டு இருக்கும் சுதர்ஷன் -வித்யா தம்பதியினருக்கோ மனம் நிறைகிறது.


latest tamil newsசுதர்ஷன் தந்தை மறைந்த வெங்குஷாதான் விலங்குகள் பறவைகள் மீது பாசம் வைக்க மகனுக்கு கற்றுக் கொடுத்தவர் இந்த பறவைகளை மகிழ்ச்சிப்படுத்தினால் தந்தையை சந்தோஷப்படுத்தியது போலாகும் என்பதற்காக சுமார் பத்து வருடங்களுக்கு முன் வீட்டின் மாடியில் பறவைகளுக்கு இரை வைக்க ஆரம்பித்தவர் நாள் தவறாமல் இன்று வரை தொடர்கிறார்.


latest tamil newsஎல்லா பறவைகளுக்கும் பொதுவாகத்தான் சாப்பாடு வைத்தார் ஆனால் கிளிகள்தான் பத்து நுாறு என்று ஆரம்பித்து இன்று சுமார் மூவாயிரம் கிளிகள் வரை வந்து சாப்பிட்டுவிட்டு செல்கின்றது.

காலை 6 மணிக்கு ஒரு முறையும் மாலை 4 மணிக்கு ஒரு முறையும் என ஒரு நாளைக்கு இரு முறை உணவு வைக்கிறார் தண்ணீரும் தனியாக வைக்கிறார் ஆனால் ஊறவைத்த அரிசியிலேயே தண்ணீர் இருப்பதால் கிளிகள் தண்ணீரை சீண்டுவதேயில்லை.வியாபாரியான இவர் தனது வருமானத்தில் நாற்பது சதவீதம் இதற்காக ஒதுக்கிவிடுகிறார் யாரிடமும் இதற்காக உதவி எதிர்பார்ப்பது இல்லை ஆனால் இந்த புண்ணியத்தில் எங்களுக்கும் பங்கு கொடுங்கள் என்று விரும்பிக் கேட்டு சில உறவுகளும் நட்புகளும் அரிசி போன்ற பொருட்கள் தரும்போது ஏற்றுக் கொள்கிறார்.

இவரது நாள் காலை நான்கு மணிக்கே இதற்காக விடிந்துவிடுகிறது கொஞ்சம் கொஞ்சமாய் பிரித்து சாப்பாடு வைப்பதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகிவிடுகிறது,மாலை நேரத்தில் மனைவியும் தாயார் சரோஜினியும் உதவியும் உற்சாகமும் தருகின்றனர். கிளிகளுக்கு சாப்பாடு வைப்பதற்காக இவர் கடந்த பத்து வருடங்களாக வெளியூர் எங்கும் போனதில்லை அதற்காக வருத்தப்படுவதும் இல்லை.

மழையானாலும் குளிரானாலும் வெயிலானாலும் என் வீட்டிற்கு எங்கு இருந்தோ வரும் இந்தக் கிளிகள் கூட்டம் வெறும் சாப்பாட்டிற்கு வருவதாக நான் நினைக்கவில்லை என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வாதிக்க வருவதாகவே எண்ணுகிறேன் என்று வார்த்தைகளிலும் கண்களிலும் சந்தோஷத்தை நிரப்பிக் கொண்டு பேசும் சுதர்சனிடம் பேசுவதற்கான எண்:90420 48481.

-எல்.முருகராஜ்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
05-டிச-202016:37:17 IST Report Abuse
karutthu எங்கள் வீட்டிலும் உணவு வைக்கிறோம் ... குருவிகள் மற்றும் காக்கைகள் வந்து உண்கின்றன .அவைகள் சாப்பிடும் அழகை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கும் .குருவியின் கீச் கீச் சத்தம் கேட்கவே இனிமையாக இருக்கும்
Rate this:
Cancel
S.K. Praba - Madurai,இந்தியா
05-டிச-202013:23:08 IST Report Abuse
S.K. Praba முதலில் எனது நன்றி கலந்த வணக்கங்கள். ஆறு அறிவு படைத்த மனிதர்களிடம் பழகுவதை விட பறவைகளிடம் பழகினால் எத்தனை ஆத்மார்த்தம் இருக்கும் என்பதை அனுபவிக்க ஆசை ஏற்பட்டுள்ளது. உங்களுக்கு கவலையே தெரியாது என்று நம்புகிறேன். உங்களின் இந்த சேவை தொடர எனது அன்பான வாழ்த்துக்கள். சென்னை வந்தால் உங்களை மற்றும் உங்கள் பாசமான பறவைகளை வந்து பார்க்கவும் ஆசை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X