சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

வித்தியாசமான அக்கா!

Added : நவ 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
இன்னுமா உலகம் நம்புகிறது?'கம்பீரமாக வலம் வந்த மனிதர், இப்படி அநியாயத்துக்கு பவ்ய மனிதராக மாறி விட்டாரே' என, பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமாரை பார்த்து, கண்ணீர் வடிக்கின்றனர், அவரது கட்சி நிர்வாகிகள். பீஹாரில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்றிருந்த ஆளும் கட்சியான, ஐக்கிய ஜனதா தளம், 43 தொகுதிகளில் மட்டுமே வெற்றி

அக்கம் பக்கம்

இன்னுமா உலகம் நம்புகிறது?

'கம்பீரமாக வலம் வந்த மனிதர், இப்படி அநியாயத்துக்கு பவ்ய மனிதராக மாறி விட்டாரே' என, பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமாரை பார்த்து, கண்ணீர் வடிக்கின்றனர், அவரது கட்சி நிர்வாகிகள்.
பீஹாரில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்றிருந்த ஆளும் கட்சியான, ஐக்கிய ஜனதா தளம், 43 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.அதன் கூட்டணி கட்சியான, பா.ஜ., 74 தொகுதிகளில் வெற்றி பெற்று, அசத்தியது. இதனால், பா.ஜ., வின் தயவில், முதல்வர் நாற்காலியில் அமர்ந்து, காலம் தள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் நிதிஷ் குமார். எதிர்க்கட்சியினர் மட்டுமல்லாது, கூட்டணி கட்சியினர் கூட, 'டம்மி' முதல்வர் என, அவரை கிண்டலடிக்கத் துவங்கியுள்ளனர். நிதிஷ் குமார் முகத்தில் கொஞ்சமும் உற்சாகம் இல்லை. சோகத்துடனேயே தலைமைச் செயலகத்துக்கு வந்து செல்கிறார். 'இந்த அமைதி எல்லாம் கொஞ்ச நாட்களுக்குத் தான். எங்கள் தலைவர், விரைவில் விஸ்வரூபம் எடுப்பார். எதிரிகளை பந்தாடுவார்' என, நம்பிக்கையுடன் கூறுகின்றனர், நிதிஷ் குமார் விசுவாசிகள்.
எதிர்க்கட்சியினரோ, 'இன்னுமா இந்த உலகம் உங்களை நம்புகிறது. அந்தக் காலம் எல்லாம் மலையேறி விட்டது. பா.ஜ.,வை பகைத்தால், முதல்வர் நாற்காலி காலியாகி விடும்' என, எகத்தாளம் பேசுகின்றனர். நிதிஷ் குமாரோ, 'இந்த பிரச்னைக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை' என்பது போல், முகத்தை உம்மென வைத்து, அமைதியாக நடமாடுகிறார்.


வித்தியாசமான அக்கா!



'தம்பிக்கு முதல்வர் பதவி கிடைக்காமல் போனதற்கு சந்தோஷப்படும் ஒரே அக்கா, இவராகத் தான் இருக்கும்' என, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பார்தியை பற்றி, எரிச்சலுடன் பேசுகின்றனர், அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள். ஊழல் வழக்கில் சிக்கி, லாலு பிரசாத் சிறைக்கு போவதற்கு முன், தனக்குப் பின், தன் மகள் மிசா பார்தியை அரசியல் வாரிசாக்க நினைத்தார். கடைசி நேரத்தில், மனதை மாற்றி, தன் இளைய மகன் தேஜஸ்வி யாதவை, அரசியலில் முன் நிறுத்தினார். தந்தையின் இந்தச் செயல், மிசா பார்தியை கடும் டென்ஷனாக்கியது. தம்பி தேஜஸ்வி யாதவுக்கு போட்டியாக, சில அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். திடீரென அவர் மீது பாய்ந்த வழக்குகளால், மவுனமாகி விட்டார்.
சமீபத்தில் நடந்த பீஹார் சட்டசபை தேர்தலின்போது, கருத்துக் கணிப்புகள் எல்லாம், 'தேஜஸ்வி யாதவ் தான், அடுத்த முதல்வர்' என்றன. இதனால், ஒட்டுமொத்த ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினரும் உற்சாகத்தில் இருந்தபோது, மிசா பார்தி மட்டும் சோகத்துடன் வலம் வந்தார். சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான போது, நிலைமை தலைகீழாகி விட்டது. ஆளும் கட்சி கூட்டணியே மீண்டும் வெற்றி பெற்றது. இப்போது, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினர் கவலையில் முடங்கியபோது, மிசா பார்தி முகத்தில் மட்டும் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிந்தது.
இதைப் பார்த்த பீஹார் வாக்காளர்கள், 'வித்தியாசமான அக்காவாக இருக்கிறாரே, மிசா பார்தி' என, முணு முணுக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-நவ-202004:32:16 IST Report Abuse
J.V. Iyer 'வித்தியாசமான அக்காவாக இருக்கிறாரே, மிசா பார்தி' - தமிழ்நாட்டில் ஸ்டாலினும் அழகிரியும் போன்று குடும்ப சச்சரவு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X