பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : நவ 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
நவம்பர் 22, 2016மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா, 1930, ஜூலை, 6ல், ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், சங்கரகுப்தம் என்ற ஊரில் பிறந்தார். இவர் தந்தை பட்டாபிராமையா, புல்லாங்குழல் வித்வான்; தாயார் சூர்யகாந்தம்மா, வீணை வித்வான்.தன், 9வது வயதில் முதல் வாய்ப்பாட்டு கச்சேரி நிகழ்த்தினார். அகில இந்திய வானொலியில் குழந்தைக் கலைஞராக, 'ஏ கிரேடில்' சேர்ந்தார். 11வது வயதில்,

இதே நாளில் அன்று

நவம்பர் 22, 2016

மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா, 1930, ஜூலை, 6ல், ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், சங்கரகுப்தம் என்ற ஊரில் பிறந்தார். இவர் தந்தை பட்டாபிராமையா, புல்லாங்குழல் வித்வான்; தாயார் சூர்யகாந்தம்மா, வீணை வித்வான்.தன், 9வது வயதில் முதல் வாய்ப்பாட்டு கச்சேரி நிகழ்த்தினார். அகில இந்திய வானொலியில் குழந்தைக் கலைஞராக, 'ஏ கிரேடில்' சேர்ந்தார். 11வது வயதில், தியாகராஜர் உத்சவத்தில், ஒன்றரை மணி நேரம் தனிக் கச்சேரி நிகழ்த்தினார். 76 வயது வரை இசைப் பயணத்தைத் தொடர்ந்தார்.வாய்ப்பாட்டைத் தவிர, பிரபல வித்வான்களுக்கு, பக்கவாத்தியமாக வயலினும் வாசித்திருக்கிறார். வயோலா, புல்லாங்குழல், வீணை, மிருதங்கம் என, பல கருவிகள் வாசிப்பதில் புலமை பெற்றவர். 72 மேளகர்த்தா ராகங்களிலும் கீர்த்தனைகள் இயற்றி இருக்கிறார். திரைப்படப் பின்னணிப் பாடகராகவும் விளங்கினார். பத்மஸ்ரீ துவங்கி, செவாலியே வரை, எண்ணற்ற விருதுகள் பெற்றவர்.உடல் நலக்குறைவு காரணமாக, 2016 நவம்பர், 22ல், தன், 86வது வயதில் காலமானார். அவர் இறந்த தினம் இன்று.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
22-நவ-202012:12:11 IST Report Abuse
Bhaskaran திரையில் இவர் பாடிய தங்கரதம் வந்தது ஒருநாள் போதுமா , மவுனத்தில் விளையாடும் மனசாட்சியே .சின்னக்கண்ணன்அழைக்கிறான் .காலத்தை வென்று நிற்கும் பாடல்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X