மனுஸ்மிருதி மீது ஏன் கோபம்?

Updated : நவ 23, 2020 | Added : நவ 21, 2020 | கருத்துகள் (40)
Share
Advertisement
ஹிந்துக்களை எதிர்ப்பவர்களுக்கு, முதலில் நினைவுக்கு வருவது மனுஸ்மிருதி. அந்த மனுதர்ம சாஸ்த்திரத்தை ஏளனம் செய்வதே, முற்போக்கு கண்ணோட்டம் என, சிலர் நினைக்கின்றனர். நாகரிகமானவர்கள் என்று எண்ணிக் கொள்ளும் சிலருக்கு, மனு பெரிய எதிரியாகி விட்டார்.மனுதர்ம சாஸ்த்திரம் என்ற பெயரைச் சொன்னாலே, ஹிந்துக்களில் கூட பலரும் சங்கடமாக உணர்கின்றனர். போலி
உரத்தசிந்தனை... மனுஸ்மிருதி மீது ஏன் கோபம்?

ஹிந்துக்களை எதிர்ப்பவர்களுக்கு, முதலில் நினைவுக்கு வருவது மனுஸ்மிருதி. அந்த மனுதர்ம சாஸ்த்திரத்தை ஏளனம் செய்வதே, முற்போக்கு கண்ணோட்டம் என, சிலர் நினைக்கின்றனர். நாகரிகமானவர்கள் என்று எண்ணிக் கொள்ளும் சிலருக்கு, மனு பெரிய எதிரியாகி விட்டார்.மனுதர்ம சாஸ்த்திரம் என்ற பெயரைச் சொன்னாலே, ஹிந்துக்களில் கூட பலரும் சங்கடமாக உணர்கின்றனர்.


போலி மேதாவிகள்


அனைத்துப் புறங்களில் இருந்தும், அதன்மீது விழும் மறுப்புகளுக்கும், புகார்களுக்கும் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் குழம்புகின்றனர்.மனுஸ்மிருதி குறித்து, தெலுங்கு மொழியின் மூத்தப் பத்திரிகையாளரும், 'ஆந்திரபூமி' நாளிதழின் ஆசிரியருமான, எம்.வி.ஆர். சாஸ்திரி, 'நமக்குப் பிடிக்காத மனு' என்ற நுாலை, பல ஆதாரப்பூர்வமான சான்றுகளோடு எழுதியுள்ளார். அதில், 'இந்நாட்களில் மனுஸ்மிருதியை மறுப்பவர்களுக்கு உண்மையில் அதில் என்ன உள்ளது என்றே தெரியாது. எப்போதோ எங்கேயோ யாரோ போலி மேதாவிகள் எழுதியதையோ கூறியதையோ, உண்மை என்று நம்புபவர்களே அதிகம்' என்று குறிப்பிடுகிறார்.பிரபஞ்சத்திலேயே தர்ம நியாய சம்ஹிதையை எழுதிய முதல் அறிஞர் மனு. மனுவின் வர்ண அமைப்பு பகுத்தறிவோடு கூடியது.

தற்போதுள்ள ஜாதி அமைப்பு வேறு. மனு கூறிய நான்கு வர்ண அமைப்பு வேறு. அவ்விரண்டிற்கும் இடையே, இமயமலைக்கும், கற்குவியலுக்கும் உள்ள வேறுபாடு உள்ளது.அதே பெயரில் காலக்கிரமத்தில் ஜாதிகளையும், அதன் உப குலங்களையும் நாம் ஏற்படுத்திக் கொண்டோம். அதற்கு மனு பொறுப்பல்ல.'ஜாதியின் பின் உள்ள கொள்கை வேறு. வர்ணத்தின் பின் உள்ள கொள்கை வேறு. அவ்விரண்டும் அடிப்படியில் வேறு வேறானவை. அது மட்டு மல்ல. அவை அடிப்படையில் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று எதிரானவை. மக்கள் தம் வர்ணங்களை மாற்றிக் கொள்ள முடியும்' என, சட்டமேதை அம்பேத்கார் தன் நுால் ஒன்றில் தெரிவிக்கிறார்.

மனு ஸ்மிருதி மீதான வெறுப்பு, மனுவுக்கோ அவருடைய தர்ம சூத்திரங்களுக்கோ மட்டுமே தொடர்புடைய விவகாரமானால், நவீன சமுதாயம் பெரிதாக கண்டுகொள்ள வேண்டிய தேவையில்லை. ஆனால், மனுவை நோக்கிக் குறி வைத்து, ஹிந்து மதத்தையும், கலாசாரத்தையும், நம் பாரம்பரியத்தையும் மண்ணோடு புதைக்க வேண்டும் என்ற சதித்திட்டம் நடக்கிறது.மனுஸ்மிருதி மிக மிகப் பழமையான, ௪,௦௦௦ ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட தர்ம சாஸ்த்திர நுால். மானுட வாழ்வின் நியமங்களையும், தர்ம நெறி முறைகளையும் விவரிக்கும் நுால்.


வேதம்தனி மனிதனுக்கும் அவன் மூலம் சமுதாயத்திற்கும் அளித்த நடத்தை விதிமுறைகளைக் கொண்ட இந்த நுால் வேதங்களை ஆதாரமாகக் கொண்டது. ஆனால், காலக்கிரமத்தில் மனுதர்ம சாஸ்த்திரத்தில் இடைச்செருகல்கள், இணைப்புகள், கற்பனைகள் நுழைந்துவிட்டன. மறக்கப்பட்டிருந்த மனுஸ்மிருதியை நவீன உலகிற்கு உயர்வாக அறிமுகம் செய்தவர்களில், ஜார்ஜ் பூலர் என்பவரும் ஒருவர். அவர் கடந்த, 1886ல், 'லாஸ் ஆப் மனு' என்ற பெயரில், பூலர் வெளியிட்ட ஆராய்ச்சி நுாலில் அவர் கூறுவதைப் பாருங்கள்:மனுஸ்மிருதியில் சிறிதும் பெரிதுமான இடைச்செருகல்கள், மிக அதிக எண்ணிக்கையில் உள்ளன. ஒரு இடத்தில் கூறியுள்ளவற்றுக்கு முழு மாறுபாடாக, இன்னொரு இடத்தில் வேறு விதமாக குறிப்பிட்டுள்ளதைக் காண முடிகிறது. இது, காலக்கிரமத்தில் சேர்ப்புகளும் இணைப்புகளும் நடந்ததால் நேர்ந்த விளைவு.
இவ்வாறு அவர் கூறுகிறார்.


அனைத்தையும் விட முக்கியமானது வேதம். அதில், இடைச்செருகல்கள் இல்லை; வெவ்வேறு பாடங்கள் இல்லை. எங்கும் ஓர் அட்சரம் தவறிவிடாமல் யாரும் மாற்றுவதற்கு வாய்ப்பில்லாமல் மறுக்க இயலாத கட்டமைப்போடு பழங்காலத்திலிருந்தே காப்பாற்றப்பட்டு வருவதால் வேதம் விஷயத்தில் சந்தேகமோ தெளிவின்மையோ கிடையாது. வேதமே மூலம் என்று மனுவே கூறியுள்ளதால், வேதத்தில் கூறியுள்ளவற்றுக்கு விரோதமாக மனுஸ்மிருதியில் ஏதாவது கூறியிருந்தால், அது மனுவின் அபிப்பிராயம் அல்ல என்று தீர்மானித்து விடலாம். ஸ்மிருதிகள் எத்தனை இருந்தாலும், அவற்றின் போதனைகளின் சாரமான தர்மத்திற்கு விரோதமான அம்சங்கள் எங்கிருந்தாலும் கண்டுபிடித்து விடலாம். அதில், சந்தேகம் ஏதாவது இருந்தால், மூன்றாவது பிரமாணமான சதாசாரத்தை அனுசரித்து, நல்ல பழக்கவழக்கங்களைக் கொண்டு தவறா, சரியா என்று முடிவெடுக்கலாம். அப்படியும் ஒருவேளை, ஏதாவது விஷயம் நம் மனசாட்சிக்கு விரோதமாக இருந்தால் மனதைக் கொன்று, அதை கடைப்பிடிக்க வேண்டிய தேவையில்லை என்று மனுவே விதிவிலக்கு அளித்துள்ளார். உலகில் வேறு எந்த ஒரு மதமும் மானுடனுக்கு அனுமதி அளிக்காத, வளைந்து கொடுக்கும் தன்மை இது.


நவீன தராசுஅறிவியல் கூறும் ஆசிட் டெஸ்ட்களுக்கு சற்றும் குறையாத இந்த நான்கு தர நிர்ணயங்களின் உதவியோடு, மனுஸ்மிருதியில் தவறுகளை நீக்குவது இயலாத காரியம் இல்லை. உலகில் எந்த தர்ம சாஸ்த்திரமானாலும், அது வெளிவந்த காலத்தின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பார்க்க வேண்டுமே தவிர, இன்றைய சிந்தனைப் போக்கோடு அன்றைய கருத்துக்களின் மீது தீர்ப்பு கூறக் கூடாது.அவ்வாறு நவீன தராசு கொண்டு விலை கூறப்போனால், வெளிநாட்டு மதங்களைச் சேர்ந்த எந்த ஒரு புனித நுாலும் நிற்க முடியாது. 'மனு, பெண்களுக்கு எதிரி' என்று கூச்சலிடும் கூட்டத்தினருக்கு சமஸ்கிருதத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளும் ஆற்றல் துளியும் கிடையாது.'எங்கு பெண்கள் மதிக்கப்படுகின்றனரோ, அங்கு தேவதைகள் கருணையோடு விளங்குவர்.

பெண்களுக்கு மதிப்பில்லாத இடத்தில் நடக்கும் தெய்வ பூஜை போன்ற செயல்கள் அனைத்தும் வீண்' என, மனுஸ்மிருதியில் சொல்லப்பட்டுள்ளது.அதுபோல, 'சிறு வயதில் பெண்ணைத் தந்தை பாதுகாக்க வேண்டும்; மணமான பின் யௌவன வயதில் கணவன் பாதுகாக்க வேண்டும்; முதிய வயதில் மகன் பாதுகாக்க வேண்டும்; எப்போதுமே பெண்ணை பாதுகாப்பு அற்றவளாக விடக்கூடாது' என்றும், மனு தான் கூறுகிறார். மேலும், 'பெண்கள் துயருற்றால் அவர்களின் துன்பத்துக்குக் காரணமானவரின் வம்சம் முழுவதும் நசிந்து போகும்.


பெண்கள் மகிழ்ச்சியோடு இருந்தால் அந்த வீடும், அவர்களின் வம்சமும் எப்போதும் ஆனந்தமாக மேன்மையுறும்' என்று சொல்லி இருப்பதும் மனு தான்.உலகில், பெண்களின் சிறப்பை அடையாளம் கண்டு, அவர்களின் கண்ணியத்தை உயர்த்தி, சமுதாயத்தில் தகுந்த, கவுரவமான ஸ்தானத்தை அளித்த முதல் தர்மவாதி மனு. சொத்துரிமை விஷயத்தில், 'புத்ரேன துஹிதா சம' என்று, மகன், மகள் இருவரும் சமமானவர்கள் என்று மிகப் பழங்காலத்திலேயே அடித்துக் கூறிய பெருந்தகை மனு.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், மனு என்ன சொன்னார் என்று பாருங்கள்:'பெற்றோர், மகளுக்கு சரியான வயதில் திருமணம் செய்யாவிட்டால், மகள் தகுந்தவனை மணம் புரிந்து கொள்ளலாம். பெற்றோரை எதிர்த்த பாவம் பெண்ணுக்கு ஏற்படாது' என்கிறார். இப்போது, வாய்கிழியப் பேசும் பகுத்தறிவாளர்களை, பெண்ணியவாதிகளை, மனிதாபிமானவாதிகளை சில கேள்விகள் கேட்போம்:மனு ஸ்மிருதியில் பெண் சுதந்திரத்தை மனு பறித்துவிட்டார் என்று நீங்கள் எல்லாம் மிகவும் ஆவேசமாக முழங்கினீர்கள் அல்லவா... கணவன் காலின் கீழ், பெண் வாயை மூடிக் கொண்டு கிடக்கவேண்டுமென்று, ஒரு மதத்தின் புனித நுால் கூறுவது, பெண்ணுக்கு மிக உயர்ந்த சுதந்திரம் அளித்தாற்போல ஆகிறதா?புனித நுால்பெண்ணை ஆதிசக்தியாகப் போற்றும் ஹிந்து மதம், பெண்களை கவுரவித்து வழிபட்டால் தான் தேவதைகள் மகிழ்வர் என்று கூறிய மனுதர்மம், உங்கள் கண்ணுக்கு பகையாகத் தெரிகிறதா? மனு ஸ்மிருதியில் உள்ளதென்று நீங்கள் நினைப்பதை விட, நுாறு மடங்கு அதிகம் இழிவாக உள்ள பிற மத புனித நுால் குறித்து நீங்கள் ஏன் வாய் திறப்பதில்லை? யாரும் சீண்டாத, காலத்தில் மிகப்பழமையான மனுஸ்மிருதியில், ஆண் - பெண் உறவு குறித்து விதித்த கட்டுப்பாட்டிற்கே, ஊர் இரண்டுபடும்படி கூச்சலிடுபவர்கள், தற்போதும் உலகெங்கும் கோடிக்கணக்கானவர்கள் பக்தியோடு பாராயணம் செய்யும், ஒரு மதத்தின் புனித நுாலில் இருப்பது பற்றி வாய் திறக்க மாட்டீர்கள். ஏனென்றால், மனுஸ்மிருதியை பயங்கர பிசாசு போல் சித்தரிக்கும் சதித் திட்டங்களையும், புரளிகளையும் கேட்டு, வேண்டாத பிரமைகளை வளர்த்துக் கொண்டுள்ள சாமானிய மக்களுக்கு, இந்த விவாதத்தின் மறுபக்கத்தைக் காட்டும் முயற்சி இது.இது எதுவரை பலனளிக்கும் என்பதை அறிஞர்களே கூற வேண்டும்!தொடர்புக்கு: ராஜி ரகுநாதன் எழுத்தாளர், ஹைதராபாத்இ - மெயில்: raji.ragunathan@gmail.com 9849063617

Advertisement
வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
25-நவ-202020:10:32 IST Report Abuse
spr "மனுதர்ம சாஸ்த்திரத்தில் இடைச்செருகல்கள், இணைப்புகள், கற்பனைகள் நுழைந்துவிட்டன." மிகச் சிறப்பான கருத்துக்கள் நானறிந்தவரை சொல்லப்பட்டது அனைத்தும் உண்மையே பல்லாயிரக் கணக்கான வருடங்கள் வாய்வழியாகவே கற்பிக்கப்பட்டது என்ற நிலையில், இடைச் செருகல் அதிகமிருக்க வாய்ப்புண்டு அதிலும் இவற்றை எழுத்து மூலம் அறிமுகப்படுத்திய பலரும் அந்நியராக இருப்பதாலும், சமுஸ்கிருத மொழியறிவு குறைவான பலர் அவர் அவர் அறிந்தபடியே விளக்கம் சொன்னதால் தவறு உண்டாக வாய்ப்பிருக்கிறது. ராமாயணத்திலேயே 475 பாடல்கள் இடைச்செருகல் என்று தமிழறிஞர்கள் கூறுவார்கள் (கம்ப ராமாயணத்தில் பல்வேறு காலகட்டங்களில் அதனைப் படித்த புலவர்கள் தங்கள் மேதைமையை கம்பனில் சேர்த்து, தங்கள் பாடல்களையும் கம்பராமாயணப் பாடல்கள் என்று நுழைத்து விட்டார்கள்.அப்படி, கம்பராமாயணத்தில் இடைச்செருகல்கள் நிறைய உண்டு என்று வருத்தப்பட்டார் ரசிகமணி டி.கே.சி. அவர் கம்பனில் கரை கண்டவர். கம்பராமாயணத்தில் உள்ள இடைச்செருகல்களை சரியாக அறிந்து, அவற்றை நீக்கி, அந்தப் பாடல்களை எல்லாம் தனியாக ஒரு பக்கத்தில் தொகுத்து பிற்சேர்க்கை என்று அறிவித்தார். அவர் தள்ளிய பாடல்களில் கம்பனின் கவிப் புலமையும் இல்லை சொற்களில் பிற்காலத்திய கட்டுமானம் இருக்கும் நவீன தமிழ்ச் சொற்கள் கையாளப்பட்டிருக்கும். பேச்சு நடை அமைந்திருக்கும் - இணையத்தில் படித்தது) திருக்குறள் கூட வேதம் ஸ்ம்ருதிகள் உபநிஷத்துக்கள் கருத்தையே பிரதிபலிப்பதால்தான் அதனை வேதம் என்று குறிப்பிடப் பயன்படுத்தப்படும் "மறை" என்ற சொல் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது அந்த நாளில் மொழி குறித்த வெறுப்புணர்வு மக்களிடமில்லை எனவே கண்ணதாசன் பாடல்களில், அவர் படித்த தமிழ்ப் பாடல் வரிகள் கையாளப்படுவது போல திருவள்ளுவரும் பல கருத்துக்களை குறளில் சொல்லியிருக்கிறார் என்பது மறுக்க இயலாத ஒன்றே. மனு சொன்ன பொது மாதர் திருக்குறளில், வரைவின் மகளிர் எனக் குறிப்பிடப்படுகின்றனர் அவர்களை விலக்க வேண்டுமென மனு சொன்ன அதே கருத்துக்களைத்தான் திருவள்ளுவரும் சொல்கிறார். எது எப்படியாயினும், திருவள்ளுவரே சொன்னது போல "குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்" என்பதே நல்ல தமிழ் மக்களுக்கு இலக்கணம். கட்டுரையசிரியரே சொன்னாற்போல "மனுவை நோக்கிக் குறி வைத்து, ஹிந்து மதத்தையும், கலாசாரத்தையும், நம் பாரம்பரியத்தையும் மண்ணோடு புதைக்க வேண்டும் என்ற சதித்திட்டம் நடக்கிறது." பணம் பதவி விளம்பரம் வாக்கு வங்கி எனப் பலவகையில் விலை போனவர்கள் செய்யும் மட்டமான பிரசாரமே
Rate this:
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
23-நவ-202011:40:24 IST Report Abuse
Appan தமிழர்களின் வாழ்வியல் திருக்குறள் சார்ந்தது மனுஸ்மிருதி சார்ந்தது இல்லை.. திருக்குறள் மதம் சார்ந்த நூல் இல்லை. திருக்குறளில் எங்கும் எந்த இடத்திலும் மதம் குறித்து சொல்லவில்லை.. கடவுள் வாழ்த்து என்று படைத்தவனை சொல்கிறது.. மற்றபடி பெண்ணை அப்படி நடத்தனும், கோவிலுக்குப் போய் நாமம் போடணும் என்று சொல்லவில்லை.. இந்த வந்தேறிகள் தமிழர்களின் கலாச்சாரத்தை கெடுக்கிறார்கள்..
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
24-நவ-202013:58:40 IST Report Abuse
Dr. Suriyaஅதைத்தான் ஆதி பகவான் , தெய்வம்முன்னு பல இடங்களில் திருக்குறள்ல சொல்லி இருக்கே ... ஆமா தமிழர் தமிழருன்னு சொல்லறீங்களே அப்போ தமிழ் கிருத்துவர்கள் , தமிழ் முஸ்லிமும்கள் வள்ளுவதை மட்டுமே கடை பிடிக்கவேண்டும் என்று உங்களால் கூற முடியுமா? அல்லது அவர்கள் எங்களுக்கு எந்த புனித நூலும் தேவை இல்லை என்று வள்ளுவத்தை மட்டுமே கடைபிடிபோம் என்று கூறுவார்களா?...
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
22-நவ-202021:39:38 IST Report Abuse
r.sundaram மதத்தை பின்பற்றுவதில் உள்ள சுதந்திரம் இந்துமதத்தில் உள்ளதுபோல் வேறு எந்த மதத்திலும் இல்லை. ஒருவன் ஜாதி மதம் இல்லை கடவுள் இல்லை என்றாலும் அவனை இந்துதான் என்கிறது இந்து மதம். கடவுள்மறுப்பாளனா அவனை கொல் என்று இந்துமதம் சொல்ல வில்லை. உனது மதம் உனக்கு எனது மதம் எனக்கு என்பதில் மிகவும் தெளிவாக உள்ளது இந்து மதம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X