சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

22 வயதில் ஐ.பி.எஸ்.,ஆனேன்!

Updated : நவ 22, 2020 | Added : நவ 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை போலீஸ் கமிஷனர், மகேஷ்குமார் அகர்வால்: கடந்த, 1994ம் ஆண்டு, என், 22 வயதில், யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதி, வெற்றி பெற்று, ஐ.பி.எஸ்., ஆனேன். அதற்கு முன், சட்டக் கல்லுாரியில் படித்தேன். அப்போதே, சட்டம் படிக்கிறோம்; எந்த துறைக்கு சட்டம் அதிகம் பயன்படும் என சிந்தித்தேன்.அப்போது, காவல் துறையுடன் சட்டம் மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதை அறிந்து, ஐ.பி.எஸ்., அதிகாரி ஆக வேண்டும் என்ற
சொல்கிறார்கள்

சென்னை போலீஸ் கமிஷனர், மகேஷ்குமார் அகர்வால்: கடந்த, 1994ம் ஆண்டு, என், 22 வயதில், யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதி, வெற்றி பெற்று, ஐ.பி.எஸ்., ஆனேன். அதற்கு முன், சட்டக் கல்லுாரியில் படித்தேன். அப்போதே, சட்டம் படிக்கிறோம்; எந்த துறைக்கு சட்டம் அதிகம் பயன்படும் என சிந்தித்தேன்.அப்போது, காவல் துறையுடன் சட்டம் மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதை அறிந்து, ஐ.பி.எஸ்., அதிகாரி ஆக வேண்டும் என்ற உத்வேகத்தில், மிக கடினமாக படித்து, தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். இதற்கு என் தந்தையின் ஊக்கமும் காரணம். அவர், வழக்கறிஞராக இருந்தார். சட்டக் கல்லுாரியில் அவர் என்னை சேர்த்து விட்டதும், 'சட்டம் படித்தால், வழக்கறிஞர் ஆகலாம்; நீதித் துறையில் சேர, தேர்வு எழுதலாம்; சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி வென்றால், போலீஸ் அதிகாரியாக வரலாம்' என்றார்.

ஐ.பி.எஸ்., அதிகாரியாக வர வேண்டும் என, அவர் தான் என்னை ஊக்கப்படுத்தினார். அதுபோல, என் அண்ணன் அப்போது, சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயார்படுத்திக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்தும் நான், சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத, கடினமாக உழைத்தேன். அதன்படி, ஐ.பி.எஸ்., அதிகாரியாக ஆகி, ௪௮ வயதில், சென்னை நகர போலீஸ் கமிஷனராக பதவி வகிக்கும் பெருமையை பெற்றுள்ளேன். இந்த கொரோனா நேரத்தில், போலீஸ் நிலையங்களை தேடி, பொதுமக்கள் வர விரும்பமாட்டார்கள் என்பதால், பொதுமக்கள் எளிதாக, போலீசாரை தொடர்பு கொள்ள, பல புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறேன்.அதில் ஒன்று தான், போலீஸ் கமிஷனரை, 'வீடியோ கால்' மூலம், பொதுமக்கள் அழைக்கும் முறை. இதனால், நேரடியாக, கமிஷனர் அலுவலகம் வந்து, கமிஷனரை சந்திக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

அதுபோல, பொதுமக்களிடம், போலீஸ் ரோந்து வாகனம் மூலம் புகார் பெறும் வசதியையும் ஏற்படுத்தியுள்ளோம். இதுபோன்ற நடவடிக்கைகளால், பொதுமக்கள் - போலீசார் உறவு சிறப்பாக உள்ளது.போலீசில் எந்த ஒரு புதிய திட்டத்தையும் செயல்படுத்துவது போலீசார், எஸ்.ஐ., மற்றும் இன்ஸ்பெக்டர்கள் தான். அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை அவர்கள் பெருமையாக கருதி, தொடர்ந்து விருப்பத்துடன் பணியாற்றும் போது தான், எந்தவொரு திட்டமும் வெற்றி பெறும். அதை எங்கள் காவலர்கள், அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

மாநகரில் கஞ்சா மற்றும் சட்டவிரோத போதை பழக்கத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். முன்னர், சாதாரணமாக கஞ்சா வழக்கு போட்டு, வழக்கை முடித்து விடுவர். இப்போது, சங்கிலி தொடர் போல, எங்கிருந்து வருகிறது; யார் விற்பனை செய்கின்றனர் என்பதை கண்டறிந்து, அவற்றை தடுத்து வருகிறோம்!


காட்டை உருவாக்கி வளர்க்கிறேன்!இன்னும் இரண்டாண்டு களுக்குள், ஒரு லட்சம் மரக்கன்றுகளை மரங்களாக வளர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து, செயற்கைக் காட்டை உருவாக்கி வரும், ஓய்வுபெற்ற, சிவில் இன்ஜினியர் நவநீதகுமார்: நான் பிறந்து, வளர்ந்தது எல்லாமே ஆந்திரா தான். கோவையில் தான், இன்ஜினியரிங் முடித்தேன். அம்மாவுக்கு திருப்பூர் சொந்த ஊர் என்பதால், ஓய்வுபெற்றது முதல், திருப்பூரில் குடும்பத்துடன் குடியேறியுள்ளேன்.

ஆந்திராவில் பல அணைகளை நான் கட்டியுள்ளேன். அதற்காக, ஏராளமான மரங்கள், இயற்கை வனப் பரப்புகளை அழித்து உள்ளோம். அப்போதெல்லாம், இதற்கு கைமாறாக, ஏராளமான மரங்களை வளர்க்க வேண்டும் என்பதை நினைவில் வைத்திருந்தேன்.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்திலிருந்து, பண்ணாரி செல்லும் வழியில், கஸ்துாரி நகர் என்ற இடத்தில், 50 ஏக்கர் நிலத்தை வாங்கி, 'சக்தி ரெயின் பாரஸ்ட்' என பெயரிட்டு, இஷ்டம் போல அடர்வனக் காடு வளர்க்கிறேன்.

இதற்காக இங்கு ஆழ்துளை கிணறுகள், பண்ணை குட்டைகள், சொட்டு நீர் பாசன வசதி போன்றவற்றை அமைத்துள்ளேன். கடந்த, 2015 முதல், இன்ஜினியரிங் தொழிலை கைவிட்டு, இயற்கை வனத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளேன்.அழிவின் விளிம்பில் உள்ள பூந்திக்கொட்டை, நறுவல்லி, தோத்தாங்கொட்டை, பலாசு, பிராய், நிலவாகை, ஆவி, புத்திரன் ஜீவா, ஆனைக்குண்டு மணி, வெப்பாலை, நெல்ரை, குங்கிலிங்கம், கருமருது போன்ற, ௨௦௦ வகையான மரங்களை தேடிப்பிடித்து வாங்கி வந்து வளர்க்கிறேன்.

இப்போது, எங்கள் பண்ணையில், 60 ஆயிரம் மரங்கள் உள்ளன. இரண்டாண்டுகளில், ஒரு லட்சம் மரங்களை வளர்க்க வேண்டும்.இயற்கை உரத்திற்காக, 200 ஆடுகள், 10 மாடுகள், 5௦௦ கோழிகள், வாத்து, மீன் போன்றவற்றையும் வளர்க்கிறேன்.கொரோனா நேரத்திற்கு முன், திருப்பூரில் இருந்து, வாரம் ஒருமுறை இங்கு வந்து, மரங்களை பார்வையிட்டு செல்வோம். கொரோனா நேரத்தில், நிரந்தரமாக இங்கு குடியிருந்து விட்டோம். இதற்காக, இந்த காட்டின் நடுவே, 'ஆஸ்பெஸ்டாஸ்' கூரை வேய்ந்த வீட்டை கட்டி உள்ளோம்.துவக்கத்தில் மரம் வளர்ப்பு ஒன்றும் பெரிய விஷயமில்லை என்ற நினைப்பு தான் இருந்தது. ஆனால், சாதாரண கன்றாக வாங்கி, அதை வளர்த்து பெரிய மரமாக மாற்றுவது சாதாரண விஷயமில்லை.

ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தால் தான், மரங்கள் வளரும்.எங்கள் உணவிற்கு தேவையான காய்கறிகள், கீரைகளை இந்த காட்டிலேயே வளர்த்து பறித்துக் கொள்கிறோம். வருமானத்திற்காக இந்த காட்டை வளர்க்கவில்லை.இயற்கையைப் பாதுகாக்க வேண்டும்; இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என்ற விழிப்புணர்வை ஊட்டுவதற்காகவே காடு வளர்க்கிறேன்!

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R M Reddy - Hyderabad,இந்தியா
22-நவ-202013:53:57 IST Report Abuse
R M Reddy கட்டுறையினூடே, தங்கத் தமிழ் எண்களின் பயன்பாடு... என்மனம் புழகாங்க்கிதமடைகிறது... தினமலருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X