ஆண்மை குறித்து போலி குற்றச்சாட்டு: டில்லி உயர் நீதிமன்றம் கண்டிப்பு| Dinamalar

ஆண்மை குறித்து போலி குற்றச்சாட்டு: டில்லி உயர் நீதிமன்றம் கண்டிப்பு

Updated : நவ 23, 2020 | Added : நவ 21, 2020 | கருத்துகள் (5)
Share
புதுடில்லி: 'விவாகரத்து வழக்குகளில், ஆண்மை குறைபாடு குறித்து போலியான குற்றச்சாட்டை பெண்கள் முன்வைப்பது, கொடுமையான செயல்' என, டில்லி உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது. விசாரணை டில்லியைச் சேர்ந்த தம்பதியர், கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து கோரி, கீழமை நீதிமன்றத்தை நாடினர்.அந்த வழக்கு விசாரணையில், 'என் கணவருக்கு ஆண்மை குறைபாடு இருப்பதால், அவருடன்
ஆண்மை ,போலி குற்றச்சாட்டு:  டில்லி உயர் நீதிமன்றம் கண்டிப்பு

புதுடில்லி: 'விவாகரத்து வழக்குகளில், ஆண்மை குறைபாடு குறித்து போலியான குற்றச்சாட்டை பெண்கள் முன்வைப்பது, கொடுமையான செயல்' என, டில்லி உயர் நீதிமன்றம்
கண்டித்துள்ளது.


விசாரணை


டில்லியைச் சேர்ந்த தம்பதியர், கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து கோரி, கீழமை நீதிமன்றத்தை நாடினர்.அந்த வழக்கு விசாரணையில், 'என் கணவருக்கு ஆண்மை குறைபாடு இருப்பதால், அவருடன் சேர்ந்து வாழ முடியாது' என, மனைவி தெரிவித்தார்.ஆனால், மருத்துவ நிபுணர் பரிசோதனையில், கணவருக்கு ஆண்மை குறைபாடு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. ஆனாலும், கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து மனு தாக்கல் செய்ததால், இந்த வழக்கில், அந்த தம்பதிக்கு விவாகரத்து வழங்கி, டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில், தன் கணவனுடன் மீண்டும் சேர்ந்ந்து வாழ விரும்புவதாகவும், கீழமை நீதிமன்றம் அளித்த மனுவை தள்ளுபடி செய்யும்படியும் கோரி, மனைவி தரப்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


பாதிப்பு



இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:ஆண்மை குறைபாடு குறித்து கணவன் மீது போலியான குற்றச்சாட்டை கூறி விவாகரத்து பெறுவது, கொடுமையான செயல். முந்தையை வழக்கின் முழு விசாரணையிலும், 'என் கணவருக்கு ஆண்மை குறைபாடு உள்ளது' என, மனுதாரர் தரப்பில் திரும்ப திரும்ப தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற குற்றச்சாட்டுகள், சம்பந்தப்பட்ட நபரை, உடலளவிலும், மனதளவிலும் கடுமையாக பாதிக்கும். எனவே, மனுதாரர் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. விவாகரத்து வழங்கி, டில்லி கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X