தேர்தல் தோல்வி; அமெரிக்க கருப்பின மக்கள்மீது குற்றஞ்சாட்டும் டிரம்ப்

Updated : நவ 21, 2020 | Added : நவ 21, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. இதனை அடுத்து அங்கு ஜனநாயக கட்சி 306 நாடாளுமன்ற தொகுதிகளை வென்று மாபெரும் வெற்றி பெற்றது.வரும் ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக கமலா ஹாரிஸ் ஆகியோர் பதவி ஏற்க உள்ளனர். நிலைமை இவ்வாறு இருக்க அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தனது தோல்வியை இன்னும்

அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. இதனை அடுத்து அங்கு ஜனநாயக கட்சி 306 நாடாளுமன்ற தொகுதிகளை வென்று மாபெரும் வெற்றி பெற்றது.



latest tamil news



வரும் ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக கமலா ஹாரிஸ் ஆகியோர் பதவி ஏற்க உள்ளனர். நிலைமை இவ்வாறு இருக்க அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தனது தோல்வியை இன்னும் ஏற்றுக்கொள்ளாமல் நீதிமன்றத்தில் வழக்காடி வருகிறார்.
குறிப்பிட்ட சில மாகாணங்களில் தேர்தல் முறைகேடு நடந்ததாகவும் தனது வாக்குகள் எண்ணப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டி வருகிறார். குடியரசு கட்சி வழக்கறிஞர்கள் தொடர்ந்து அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் தேர்தல் முறைகேடு வழக்கை தொடர்ந்து வருகின்றனர்.
ஆட்சி மாற்றக்குழு எவ்வளவு முயன்றும் ட்ரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற மறுக்கிறார். மறுபக்கம் ஜோ பைடன் தான் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், அமெரிக்காவில் அதிகரித்துவரும் கொரோனாவை எவ்வாறு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று திட்டமிடத் துவங்கிவிட்டார்.
தற்போது அமெரிக்க அதிபர் டிரம்பின் வெறுப்பு அமெரிக்க கருப்பின மக்கள்மீது விழுந்துள்ளது. டிரம்பின் ஆட்சிக்காலத்தில் மினசோட்டா மாகாணத்தில் ஜார்ஜ் புளாயிட் என்ற கருப்பின நபர் கொல்லப்பட்டது உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கருப்பின மக்கள் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை இனவாதத்தை தூண்டுகிறார் என்று குற்றம் சாட்டி வந்தனர்.


latest tamil news



தற்போது கருப்பின மக்கள் அதிகம் வசிக்கும் மாகாணங்களில்தான் தேர்தல் முறைகேடுகள் நடந்துள்ளதாக டிரம்ப் தரப்பு குற்றம் சாட்டி உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க கருப்பின மக்களை சட்டத்துக்கு புறம்பான விஷயங்களைச் செய்யும் குற்றவாளிகள் என்று ட்ரம்ப் மறைமுகமாக குற்றம்சாட்டுவதாகக் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
22-நவ-202013:30:55 IST Report Abuse
Ramesh Sargam இந்த அளவுக்கு பதவி வெறி பிடித்த முதல் அதிபரை இப்பொழுதுதான் நான் பார்க்கிறேன்.
Rate this:
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
22-நவ-202015:15:28 IST Report Abuse
RaajaRaja Cholanநீங்க அந்த நாட்டுலயே பிறந்து வளந்தவர்றாங்க ??? . நம்ம நாட்டை , அமைச்சர்களை எவ்வளவு தெரியும் உங்களுக்கு ?...
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-நவ-202013:30:34 IST Report Abuse
தமிழவேல் கலவரத்தை ஏற்படுத்துகின்றார்...
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
22-நவ-202012:01:01 IST Report Abuse
vbs manian சர்வ தேச விவகாரங்களில் டிரம்ப் நன்றாகவே செயல் பட்டார். தீவிரவாதத்துக்கு பலத்த எதிர் நடவடிக்கை. சீனாவை தைரியமாக எதிர் கொண்டார். அதே சமயம் வட கொரியாவுடன் சமரசம் பேசினார். பல நாடுகளில் அமெரிக்கா ராணுவத்தை வாபஸ் பெற்றார். அமெரிக்காவின் தண்ட செலவுகளை குறைத்தார். அமெரிக்கா இளைஞர்களுக்கு உள்ளூர் வேலையில் முன்னுரிமை அளிக்க முயன்றார். கொரோனா எதிர்ப்பு நடவடிக்கை திருப்தியில்லை கறுப்பர்கள் மீதான போலீஸ் கொடுமை விசா கட்டுப்பாடுகள் நிர்வாக விஷயங்களில் அதிகாரிகளை கையாள்வதில் ஆணவம் போன்ற விஷயங்கள் அளவுக்கு மேல் பிரச்சாரம் செய்யப்பட்டு தோல்வி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X