பொது செய்தி

இந்தியா

போலீஸ் சட்ட திருத்தம் கேரள கவர்னர் ஒப்புதல்

Added : நவ 21, 2020
Share
Advertisement
திருவனந்தபுரம்:பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான, 'சைபர்' தாக்குதல்களைத் தடுக்கும் வகையில், போலீஸ் சட்டத்தில் திருத்தம் செய்து, கேரள அரசு நிறைவேற்றிய அவசரச் சட்டத்துக்கு, கவர்னர் ஆரிப் முகமது கான் ஒப்புதல் அளித்துள்ளார்.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. தனிநபர்கள், பெண்கள், குழந்தைகள் மீதான, 'சைபர்' தாக்குதல்களை

திருவனந்தபுரம்:பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான, 'சைபர்' தாக்குதல்களைத் தடுக்கும் வகையில், போலீஸ் சட்டத்தில் திருத்தம் செய்து, கேரள அரசு நிறைவேற்றிய அவசரச் சட்டத்துக்கு, கவர்னர் ஆரிப் முகமது கான் ஒப்புதல் அளித்துள்ளார்.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. தனிநபர்கள், பெண்கள், குழந்தைகள் மீதான, 'சைபர்' தாக்குதல்களை தடுக்கும் வகையில், போலீசாருக்கு அதிகாரம் வழங்க, மாநில அரசு முடிவு செய்தது.

இதையடுத்து, கேரள போலீஸ் சட்டத்தில் பிரிவு, 118ல், 118ஏ என்ற பிரிவு கூடுதலாகச் சேர்க்கப்பட்டு, போலீசாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு தனிநபரின் மரியாதையை, மாண்பைக் குலைக்க உள்நோக்கத்துடன் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவிட்டாலோ, படங்கள் பதிவேற்றம் செய்தாலோ, பரப்பினாலோ, பிரசுரித்தாலோ, அதிகபட்சமாக, 10 ஆயிரம் அபராதம் அல்லது ஐந்து ஆண்டு சிறை விதிக்கப்படும்.

இரண்டு தண்டனையும் சேர்த்து விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. ஆனால், 'இந்த அவசர சட்டம், போலீசருக்கு அதிகமான அதிகாரம் அளிக்கும். பத்திரிகை சுதந்திரத்தை முடக்கும்' என, எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்த அவசர சட்டத்துக்கு, கவர்னர் ஆரீப் முகமது கான், நேற்று ஒப்புதல் அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X