அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.,விற்கு 35 தொகுதிகள் ஒதுக்கீடு?

Updated : நவ 23, 2020 | Added : நவ 21, 2020 | கருத்துகள் (64)
Share
Advertisement
தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில், பா.ஜ.,விற்கு, 35 'சீட்டு'கள் வழங்க, அ.தி.மு.க., முன் வந்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., இடம் பெற்றது. அப்போது, ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. நடக்க உள்ள சட்டசபை பொதுத் தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி மற்றும் சீட்டுகளை உறுதிப்படுத்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று சென்னை வந்தார்.அவரை
 
பா.ஜ.,விற்கு  35 தொகுதிகள் ஒதுக்கீடு?

தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில், பா.ஜ.,விற்கு, 35 'சீட்டு'கள் வழங்க, அ.தி.மு.க., முன் வந்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., இடம் பெற்றது. அப்போது, ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. நடக்க உள்ள சட்டசபை பொதுத் தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி மற்றும் சீட்டுகளை உறுதிப்படுத்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று சென்னை வந்தார்.

அவரை முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், விமான நிலையம் சென்று வரவேற்றனர். அப்போதே, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உறுதியானது.கலைவாணர் அரங்கில் நடந்த அரசு விழாவில், முதல்வரும், துணை முதல்வரும், சட்டசபை பொதுத் தேர்தலில், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி தொடரும் என, அறிவித்தனர்.
விழா முடிந்த பின், இருவரும் அமித் ஷா தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்றனர். அங்கு தேர்தல் குறித்து ஆலோசித்தனர். அப்போது பா.ஜ., விற்கு, 54 சீட்டுகளை ஒதுக்கும்படி, அமித் ஷா வலியுறுத்தியதாகவும், அ.தி.மு.க., தரப்பில், 35 சீட்டுகள் வழங்க சம்மதித்ததாகவும் கூறப்படுகிறது.
முதல்வர், துணை முதல்வர் சென்ற பின், பா.ஜ., உயர்மட்ட குழு ஆலோசனைக் கூட்டம், அமித் ஷா தலைமையில் நடந்தது.அதன்பின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில், சட்டசபை தேர்தலுக்கு, கட்சியினரை தயார் செய்வது, அ.தி.மு.க., கூட்டணி உறுதியாகி இருப்பதால், எதிர் கூட்டணியை தோற்கடிக்க, வியூகம் அமைப்பது, மக்களை சந்தித்து, அரசின் திட்டங்களை எடுத்துரைப்பது போன்றவை குறித்து ஆலோசித்துள்ளனர்.சென்னை வந்த அமித் ஷா, விமான நிலையத்தின் வெளியே, சாலையில் நடந்து சென்று, கட்சியினர் வரவேற்பை ஏற்றது.அ.தி.மு.க., உடன் அதிரடியாக கூட்டணியை உறுதி செய்து, முதல்வர் மற்றும் துணை முதல்வரை அறிவிக்க வைத்தது; 'சீட்' ஒதுக்கீட்டை முடிவு செய்தது என, அவரதுதிட்டங்கள், அரசியல் வட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.- நமது நிருபர் -


Advertisement




வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
24-நவ-202002:33:53 IST Report Abuse
தமிழவேல் 35 தானா .....🤔 அப்போ, பாக்கியை காசுகொடுத்து வாங்கிக்கலாம்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
24-நவ-202002:28:56 IST Report Abuse
தமிழவேல் படத்தில் சங்கிகள் மாஸ்க் அணியவில்லை. இவர்கள்தான் முதலாக, இரண்டாவது அலையால் பாதிக்கப் படப் போகின்றவர்கள்.
Rate this:
Cancel
Natarajan Ramasamy - Chennai,இந்தியா
23-நவ-202017:54:23 IST Report Abuse
Natarajan Ramasamy தமிழ் நாடு அசெம்பிளி தேர்தலில்,என்னை பொறுத்தவரை வாரிசு அரசியல்,ப்ராஹ்மண துவேஷம் ,தமிழ் ,ஹிந்தி திணிப்பு,NEET ,காவேரி ,சிங்கள தமிழர்கள் ,இவைகள் உதவாது. இன்றைய நிலையில் anti incumbanzi உம உதவாது.அதேபோல் லஞ்சம், 2 G உம உதவாது . ADMK BJP கூட்டணி முடிவுற்றது. DMK இப்போது கூட்டணியை முடிவுசெய்யவேண்டும். DMK ADMK தங்கள் சொந்த காலில் நின்றால் சமம். கூட்டணியில் JJ ஐ பின்பற்றி DMK சின்னத்தில் கூட்டணியில் எல்லோரும் நிற்க முடியுமா ? முடிந்தால் DMK வோட் சிதறாது. DMK அழகிரியை சேர்க்க முனையவேண்டும். இல்லையெனில் அவர் தனியாக கட்சி என்றால் மதுரையில் DMK வோட் பிரியும். கூட்டணி கட்சிகளுக்கு வெற்றிவாய்ப்புக்கு உதவக்கூடிய இடங்கள் மட்டும் தரவேண்டும். பிரசாந்த் கிஷோர் வெற்றிக்கு தொகுதி தொகுதி யாக என்ன செய்ய வேண்டும் என்பதை கணக்கெடுத்து விட்டாரா ? ஜாதி அரசியல் அதிகம் எடுபடாது. இன்றைய நிலையில் ADMK முந்தி இருப்பது போல் உள்ளது.நிலைமை மாறலாம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X