பொது செய்தி

இந்தியா

பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி பாக்., துாதரக அதிகாரிக்கு 'சம்மன்'

Added : நவ 21, 2020
Share
Advertisement
புதுடில்லி:ஜம்மு - காஷ்மீர் தேர்தலை சீர்குலைக்க, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டி இருந்தது குறித்து கண்டனம் தெரிவிக்க, பாகிஸ்தான் துாதரகத்தின் மூத்த அதிகாரியை வரவழைத்து, மத்திய அரசு, எதிர்ப்பை பதிவு செய்தது.சதித் திட்டம்ஜம்மு - ஸ்ரீநகர் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில், லாரியில் வந்த நான்கு பயங்கரவாதிகள், சமீபத்தில் போலீசாரால் சுட்டுக்

புதுடில்லி:ஜம்மு - காஷ்மீர் தேர்தலை சீர்குலைக்க, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டி இருந்தது குறித்து கண்டனம் தெரிவிக்க, பாகிஸ்தான் துாதரகத்தின் மூத்த அதிகாரியை வரவழைத்து, மத்திய அரசு, எதிர்ப்பை பதிவு செய்தது.


சதித் திட்டம்

ஜம்மு - ஸ்ரீநகர் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில், லாரியில் வந்த நான்கு பயங்கரவாதிகள், சமீபத்தில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள், பாகிஸ்தானை தலைமையிடமாக வைத்து இயங்கும், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

ஜம்மு - காஷ்மீரில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலை சீர்குலைக்க, சதித் திட்டங்களை அவர்கள் தீட்டியிருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. பாதுகாப்புப் படையினர், அவர்களை சுட்டு வீழ்த்தியதால், பெரும் அசம்பாவித சம்பவங்கள் தடுக்கப்பட்டன.இந்நிலையில், இந்த சம்பவத்தை வைத்து, பாகிஸ்தான் துாதரகத்தின் மூத்த அதிகாரிக்கு, மத்திய அரசு சம்மன் அனுப்பியது. வெளியுறவுத் துறை அமைச்சகத்தில், நேற்று ஆஜரான, பாக்., அதிகாரியிடம், மத்திய அரசு அதிகாரிகள், கண்டனம் தெரிவித்தனர்.

இது குறித்து, வெளியுறவுத் துறை, நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:பாக்., துாதரகத்தின் மூத்த அதிகாரி வரவழைக்கப்பட்டு, அவரிடம், கடும் கண்டனம் பதிவு செய்யப்பட்டது.


ஆதரவு

தேசிய பாதுகாப்பை உறுதிபடுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், மத்திய அரசு உறுதியாக முன்னெடுக்கும். பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாத குழுக்களுக்கும் ஆதரவு அளிக்கும் கொள்கையை கைவிட, பாக்.,கிற்கு அறிவுறுத்தப் பட்டது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


ராணுவ வீரர் வீரமரணம்

ஜம்மு - காஷ்மீர் எல்லையோரம் அமைந்துள்ள ரஜோரி மாவட்டத்தில், பாகிஸ்தான் ராணுவம், நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது. எல்லைச் சாவடிகள் மற்றும் கிராமங்களை குறிவைத்து நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில், நம் ராணுவ வீரர் ஒருவர், வீரமரணமடைந்தார். இதற்கிடையே, புல்வாமா மாவட்டத்தில், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள் இருவர், போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X