பொது செய்தி

தமிழ்நாடு

இப்படி முடங்கியதே கோவில் திருப்பணி

Added : நவ 21, 2020
Share
Advertisement
கோவை;'தடைபட்டுள்ள புற்றிடங்கொண்டீசர் கோவில் திருப்பணியை, அறநிலையத்துறை மீண்டும் தொடங்க வேண்டும்' என்று, சிவபக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.கோவை, பொள்ளாச்சி சாலை, ஒத்தக்கால் மண்டபத்தில், பிரசித்தி பெற்ற புற்றிடங்கொண்டீசர் கோவில் அமைந்துள்ளது. கொங்கு சோழர்களால் கட்டப்பட்ட இந்த கோவில், 850 ஆண்டு பழமை வாய்ந்தது.இங்கு புற்றிடங்கொண்ட நாதராக, சிவபெருமான்
 இப்படி முடங்கியதே கோவில் திருப்பணி

கோவை;'தடைபட்டுள்ள புற்றிடங்கொண்டீசர் கோவில் திருப்பணியை, அறநிலையத்துறை மீண்டும் தொடங்க வேண்டும்' என்று, சிவபக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.கோவை, பொள்ளாச்சி சாலை, ஒத்தக்கால் மண்டபத்தில், பிரசித்தி பெற்ற புற்றிடங்கொண்டீசர் கோவில் அமைந்துள்ளது. கொங்கு சோழர்களால் கட்டப்பட்ட இந்த கோவில், 850 ஆண்டு பழமை வாய்ந்தது.இங்கு புற்றிடங்கொண்ட நாதராக, சிவபெருமான் எழுந்தருளியுள்ளார்.
அம்பாள், பூங்கோதை நாயகி என்ற பெயரில் உள்ளார். பக்தர்களே தீர்த்தம் ஊற்றி வழிபடும் தீர்த்தலிங்கேஸ்வரர், இக்கோவிலின் தனிச்சிறப்பு.கோவிலில் ஓராண்டுக்கு முன், திருப்பணிகள் தொடங்கப்பட்டன. தளம் புதுப்பித்தல், கோபுரம் புதுப்பித்தல், வர்ணம் பூசுதல் மட்டுமே செய்யப்பட வேண்டியுள்ளது. அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கோபுர பாலாலயம் செய்யப்பட்டது. கோவில் முழுவதும் சாரம் கட்டப்பட்ட நிலையில், பணிகள் நிறுத்தப்பட்டு விட்டன.அடுத்தடுத்து அற நிலையத்துறை அதிகாரிகள் மாறியதாலும், கொரோனா தொற்று ஏற்பட்டதாலும், பணிகள் தடைபட்டுள்ளன.
தற்போது கொரோனா அச்சம் விலகி வரும் நிலையில், திருப்பணி தடைபட்டிருப்பது, பக்தர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.சிவபக்தர் கோவிந்தராஜ் கூறியதாவது:திருப்பணிக்கு அறநிலையத்துறை பணம் தர தேவையில்லை. சிவபக்தர்களே திருப்பணி செய்ய தயாராக உள்ளனர்.
அதிகாரிகள் ஒத்துழைத்தாலே போதும். கோவிலுக்குள் சாரம் கட்டியிருப்பதால் பிரதோஷ நாளில், கோவிலை நந்தி சுற்றி வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாலாலயம் செய்து, ஓராண்டு ஆகியும், கும்பாபிஷேகம் செய்யப்படாமல் இருப்பதால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். அற நிலையத்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து, திருப்பணியை மீண்டும் துவக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X