பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச் சாவடிகளில் வாக்காளர்கள் சிறப்பு முகாம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
திருவள்ளூர் மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிக்குட்பட்ட அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம், நேற்று நடந்தது.திருவள்ளூர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல், திருத்தப் பணிக்காக, கடந்த 16ம் தேதி, விரைவு வாக்காளர் பட்டியலை, கலெக்டர் பொன்னையா வெளியிட்டார். அன்று முதல், வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில், பொதுமக்கள் நலன் கருதி,

திருவள்ளூர் மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிக்குட்பட்ட அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம், நேற்று நடந்தது.

திருவள்ளூர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல், திருத்தப் பணிக்காக, கடந்த 16ம் தேதி, விரைவு வாக்காளர் பட்டியலை, கலெக்டர் பொன்னையா வெளியிட்டார். அன்று முதல், வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில், பொதுமக்கள் நலன் கருதி, மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிக்குட்பட்ட அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், நேற்று துவங்கிய வாக்காளர் சிறப்பு முகாம் இன்றும் நடைபெறுகிறது.

இந்த முகாமில், வாக்காளர் சேர்ப்பு, நீக்கம், பெயர் பிழை திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்யலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்ட ஒண்டிக்குப்பம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடந்த வாக்காளர் சிறப்பு முகாமை, கலெக்டர் பொன்னையா நேரில் சென்று பார்வையிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின் போது, தாசில்தார் விஜயகுமாரி உட்பட பலர் உடன் இருந்தனர். இதேபோல், வெள்ளவேடு அடுத்த, ஆண்டரசன்பேட்டை மற்றும் திருமழிசை ஆகிய பகுதிகளிலும், நடந்த வாக்காளர் சிறப்பு முகாமையும், கலெக்டர் பொன்னையா ஆய்வு செய்தார்.காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, 301 ஓட்டுச்சாவடிகளில், நேற்று, சிறப்பு முகாம் நடந்தது.

இதில், 18 வயது நிரம்பிய இளைஞர்கள், யுவதிகள் தங்கள் பெயரை, வாக்காளர் பட்டியலில் ஆர்வமுடன் பெயர் சேர்த்தனர்.மேலும், பெயர் நீக்கல், திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய விரும்பியோர், விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்கினர்

. - நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X