பொது செய்தி

தமிழ்நாடு

திருத்தணி கோவிலில் கந்தசஷ்டி நிறைவு விழா

Added : நவ 21, 2020
Share
Advertisement
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்த கந்த சஷ்டி நிறைவை தொடர்ந்து, நேற்று, திருக்கல்யாணம் நடந்தது. இந்நிகழ்ச்சியும், இணைய தளம் மூலம் பக்தர்களுக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது.திருத்தணி முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா, 15ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் மாலை புஷ்பாஞ்சலியுடன் விழா நிறைவுக்கு வந்தது.இதையடுத்து, நேற்று, காலை, 11:00 மணிக்கு, மலைக்கோவிலில் உள்ள காவடி

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்த கந்த சஷ்டி நிறைவை தொடர்ந்து, நேற்று, திருக்கல்யாணம் நடந்தது. இந்நிகழ்ச்சியும், இணைய தளம் மூலம் பக்தர்களுக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது.திருத்தணி முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா, 15ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் மாலை புஷ்பாஞ்சலியுடன் விழா நிறைவுக்கு வந்தது.இதையடுத்து, நேற்று, காலை, 11:00 மணிக்கு, மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில் உற்சவர் முருகனுக்கும், வள்ளி, தெய்வானையும் திருக்கல்யாண வைபவம் நடந்தது.அதை தொடர்ந்து, சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடந்தது. கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது, இதற்கு மாறாக கோவில் நிர்வாகம் இணையதளம் மூலம் நிகழ்ச்சி, நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X